என்ன தல பிரியாணியா..! நேபாள ஹோட்டலில் திடீரென குக் ஆக மாறி அஜித் சமைத்த கமகம உணவு - வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித் தற்போது நேபாளத்தில் உலக பைக் சுற்றுலா சென்றுள்ள நிலையில், அங்குள்ள ஹோட்டலில் சமைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித்திற்கு பைக்கில் உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்தக் கனவு தற்போது படிப்படியாக நனவாகி வருகிறது. இந்த உலக சுற்றுலா பயணத்தை இந்தியாவில் இருந்து தொடங்கிய அஜித், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் பைக்கிலேயே சுற்றி வந்தார். இந்தியாவில் வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்த அஜித் அடுத்ததாக உலக சுற்றுலாவுக்காக தயாராகி வந்தார்.
அஜித் தனது 62-வது படத்தில் நடித்து முடித்த பின்னர் உலக சுற்றுலாவை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டு இருந்தார். ஆனால் அப்படம் தாமதமாகி வருவதால், அஜித் பைக்கை எடுத்துக் கொண்டு தற்போதே உலக சுற்றுலாவை தொடங்கிவிட்டார். அதன்படி முதலாவதாக அஜித், நேபாளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து தனது பி.எம்.டபிள்யூ பைக்கில் பைக் ரைடிங் செய்து வருகிறார் அஜித்.
இதையும் படியுங்கள்... கால்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரபல காமெடி நடிகருக்கு மாரடைப்பு... சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்
அஜித்துக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளார்கள், அதில் நேபாளம் மட்டும் விதிவிலக்கா என்ன, அவர் அங்கு செல்லும் இடமெல்லாம் இவரை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டு அவருடன் செல்பி எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இதேபோல் அஜித் பைக் ரைடிங் செய்யும் வீடியோக்களும் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது நேபாளத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடிகர் அஜித் சமையல் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது. அதில் அந்த ஓட்டலில் பணியாற்றும் செஃப்களுடன் இணைந்து அஜித்தும் ஆர்வமாக சமைக்கும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. அஜித் பிரியாணி செய்வதில் கில்லாடி என்பதால், அங்கு அவர் கமகமவென பிரியாணியை தான் சமைத்துக் கொண்டிருப்பார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... இந்தில பேசாதீங்க; தமிழ்ல பேசுங்க ப்ளீஸ்... விருது விழாவில் மனைவிக்கு அன்புக்கட்டளையிட்ட ஏ.ஆர்.ரகுமான்