'கிரே மேன்' படத்தில் வந்தது 10 நிமிஷம் கூட இல்ல; ஹாலிவுட் நடிகரிடம் மோசமாக திட்டு வேற வாங்கிய தனுஷ்!
தனுஷ் நடித்த ஹாலிவுட் படமான 'தி கிரே மேன்' நேற்று வெளியான நிலையில், இதில் தனுஷ் வில்லனிடம் திட்டு வாங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் நடித்த 'தி கிரே மேன்' திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான நிலையில், படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் போதிலும், தனுஷின் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்துள்ளது.
நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக, தமிழ் படங்களை தொடர்ந்து, இந்தி படங்களிலும் நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து, ஹாலிவுட்டிலும் அவருக்கு நடிக்க அழைப்புகள் வர துவங்கியது. அந்த வகையில் ஏற்கனவே தனுஷ் ஹாலிவுட்டில், The Extraordinary Journey of the Fakir என்கிற படத்தில் நடித்துள்ள நிலையில், இரண்டாவதாக அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் 'தி கிரே மேன்' படத்தில் நடித்தார்.
மேலும் செய்திகள்: 'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு தேசிய விருது வாங்கிய பழங்குடி பெண் நஞ்சியம்மா யார் தெரியுமா?
தனுஷ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் இப்படம் வெளியான நிலையில், இறுதியில் தனுஷ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதற்க்கு முக்கிய காரணம் மொத்த திரைப்படத்தில் தனுஷின் Avik San கதாபாத்திரம் 10 நிமிடத்திற்கு குறைவாகவே வருகிறது.
ஒரே ஒரு சண்டை காட்சியில், ஹீரோ - ஹீரோயினோடு சண்டை போட்டு சில முக்கிய ஆதாரங்கள் அடங்கிய பென்ட்ரைவை வில்லனிடம் கொடுப்பது, அவர்கள் கெட்டவர்கள் என்பது தெரிந்த உடன், தனக்கு பணம் முக்கியம் இல்லை என, ஹீரோயினிடம் அந்த பென்ட்ரைவை ஒப்படைப்பது என இரண்டு காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார்.
மேலும் செய்திகள்: இதுவே ஒரு பெண் செய்திருந்தால்..? ரன்வீர் சிங் நியூடு போட்டோ ஷூட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
மேலும் வில்லன் தனுஷை... இந்த நாய்க்கு பணம் எதுவும் கொடுக்காதீர்கள் என கூறுவது, 'தி கிரே மேன்' தமிழ் டப்பிங்கில் இடம்பெற்றுள்ளது, பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது. தனுஷ் இந்த படத்தில் வந்தது 10 நிமிடம் கூட இல்ல... இதுல நாய்னு வேற திட்டு வாங்கணுமா? என நெட்டிசங்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
ஆனால் மொத்த படமாக இதை பார்க்கும் போது... ஜேம்ஸ் பாண்டு படத்தை பார்த்தது போல் ரசிகர்களை கவர்கிறது. எல்லாம் ஓகே தான் தனுஷுக்கு அதிக காட்சிகள் இல்லத்துக்கு தான் இவ்வளவு பில்டப்பா? என்றும் சிலர் கிசுகிசுத்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!