'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்கு தேசிய விருது வாங்கிய பழங்குடி பெண் நஞ்சியம்மா யார் தெரியுமா?
சிறிய ஈகோ மோதல் ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விறுவிறுப்பான கதையம்சத்தோடு படமாக இயக்கி இருந்தார் மறைந்த இயக்குனர் சச்சி. இந்த படத்தில் பழங்குடியின பெண் நஞ்சியம்மா பாடிய பாடல், தேசிய விருதை பெற்றுள்ள நிலையில், அவர் யார்? பின்னணி பாடகியாக ஆனது எப்படி என? தெரிந்து கொள்வதில் பலர் கவனம் செலுத்தி வருகிறார்கள். யார் அந்த நாஞ்சியம்மா என்பதை பார்ப்போம்.
சிறிய ஈகோ மோதல் ஒரு கட்டத்தில் எந்த அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை விறுவிறுப்பான கதையம்சத்தோடு படமாக இயக்கி இருந்தார் மறைந்த இயக்குனர் சச்சி. இந்த படத்தில் பழங்குடியின பெண் நஞ்சியம்மா பாடிய பாடல், தேசிய விருதை பெற்றுள்ள நிலையில், அவர் யார்? பின்னணி பாடகியாக ஆனது எப்படி என? தெரிந்து கொள்வதில் பலர் கவனம் செலுத்தி வருகிறார்கள். யார் அந்த நாஞ்சியம்மா என்பதை பார்ப்போம்.
இயக்குனர் சச்சி இயக்கத்தில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தில்... ஓய்வுபெற்ற ராணுவ வீரராக கோஷி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரித்விராஜ். தனது ஊரிலிருந்து பக்கத்துக்கு ஊருக்கு இரவு நேரத்தில் பயணம் செய்கிறார். அப்போது அட்டப்பாடி என்கிற பகுதியில் வாகன சோதனை செய்யும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தான் அயப்பன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிஜுமேனன். பிரித்விராஜின் காரை சோதனை செய்த போது அதில் இருந்து அதிக மது பாட்டில் கைப்பற்ற படுகிறது. எனவே அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கைத் தொடர்ந்து இரவு நேரம் முழுதும் ஸ்டேஷனிலேயே வைக்கிறார் பிஜிமேனன்.
மேலும் செய்திகள்: இதுவே ஒரு பெண் செய்திருந்தால்..? ரன்வீர் சிங் நியூடு போட்டோ ஷூட் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை!
கொஞ்ச நேரத்தில் ப்ரிதிவிராஜ் மிகவும் செல்வாக்கு கொண்ட நபர் என்பது தெரிய வருகிறது. எனினும் அவர் மீது எப்ஐஆர் போட்டு விட்டதால், அதை திரும்ப பெற முடியாமல் அதேசமயம் மேலதிகாரியின் உத்தரவுப்படி பிரித்விராஜூக்கு சகாயமாக செயல்பட முடிவெடுக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 வருடத்தில் ஓய்வு பெற உள்ள நேர்மையான அதிகாரியாக இருக்கும் இவரை தவறாக சித்தரிக்கும் விதமாக தனக்கு மது ஊற்றி கொடுக்க கூறி அதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு, வெளியே வந்ததும் அந்த வீடியோவை வெளியிட்டு அவரது வேலைக்கே உலை வைக்கிறார் பிரிதிவிராஜ். சிறிய ஈகோ பிரச்சனையில் துவங்கி எப்படி பட்ட சீரியஸ் பிரச்சனைகளை இருவரும் எதிர்கொள்கிறார்கள் என்பதே இந்த படத்தின் மீதி கதை.
மேலும் செய்திகள்: Suriya Birthday: நடிகர் சூர்யாவின் நடிப்பை பார்த்து மிரள வைத்த டாப் 5 திரைப்படங்கள்!
இந்த படத்தை அட்டப்பாடி பழங்குடியின மக்களின், எதார்த்தமான வாழ்க்கை மற்றும் அவர்களது கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கண் முன் நிறுத்தும் விதமாக படத்தை இயக்கி உள்ளார் மறைந்த இயக்குனர் சச்சி. இந்த படத்தில் பழங்குடியின பெண் நாஞ்சியம்மா ஒரே ஒரு காட்சியில் வந்து செல்வார். தற்போது அவர் பாடிய பாடல் தான் தேசிய விருதையும் நாஞ்சியம்மாவுக்கு பெற்று தந்துள்ளது.
நஞ்சியம்மா யார் தெரியுமா? தமிழகத்தில் கோபனாரியில் பிறந்து, வளர்ந்தவர் தான் நாஞ்சியம்மா. கேரளா மாநிலத்தில் உள்ள, அட்டப்பாடி நாக்குபத்தி கிராமத்திற்கு திருமணம் செய்து கொண்டு வந்தவர். பாடல்கள் பாடுவதில் ஆர்வம் கொண்ட இவர் அந்த பகுதியில் இருக்கும், ஆசாத் கலா சமிதி என்கிற நடன இசைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார். கேரளா மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் இசை கச்சேரிகளிலும் நஞ்சியம்மா தொடர்ந்து பாடி வருகிறார்.
இந்த படத்தில் இவர் பாடும் நாட்டர் பாடலான 'களக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு..பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ, பாடல் தான் தற்போது தேசிய விருதை அவருக்கு பெற்று கொடுத்துளளது. இப்பாடல் குறித்து நஞ்சியம்மா கூறியுள்ளதாவது, எப்போதாவது சந்தனமரக் காட்டின் மேலே வானத்தில் பறந்து மறையும் விமானத்தைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்ட தான் இந்த பாடலை பாடுவோம் என்றும், இந்த பாடலின் மெட்டு தங்களின் முன்னோர்களுடையது என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: நடன இயக்குனர் ஷோபி - லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு..! குவியும் வாழ்த்து...
'அய்யப்பனும் கோஷியும்' படத்திற்குள் எப்படி வந்தார் நாஞ்யம்மா?
படத்தின் கதை, கதாபாத்திரங்கள் என அனைத்தையும் தேர்வு செய்த பின்னர் இயக்குநர் சச்சி, இந்த குறிப்பிட்ட நாட்டர் பாடலை... பின்னணி பாடகர்களை வைத்து பாட வைப்பதை விட அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் பாட வேண்டும் என முடிவு செய்து, சிலரை பாட வைத்து கேட்டு வந்தார். அப்படி பாடி காட்டியபோது... நாஞ்சியம்மாவின் குரல் இயக்குனரை கவர்ந்தது. இவர் தான் இந்த குறிப்பிட்ட பாடலை பாட வேண்டும் என முடிவு செய்து, சென்னைக்கு அவரை அழைத்து வந்து பாடலையும் ரெக்கார்டு செய்ததாக தெரிவித்துளளார் நாஞ்சியம்மா. மேலும் இந்த விருது மூலம் அவர் என்றும் தன்னுடன் இருப்பார் என்றும் உணர்வு பொங்க தன்னுடைய நன்றிகளையும் நாஞ்சியம்மா கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்:ஒருவேளை சாப்பாடு 46 ஆயிரம் ரூபாயா? பில்லை பார்த்து ஷாக்கான பிரபலம்!
நாஞ்சியம்மாவை தவிர 'அய்யப்பனும்,கோஷியும்' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது மறைந்த இயக்குநர் சச்சிக்கு கிடைத்துள்ளது, அதே போல் சிறந்த துணை நடிகருக்கான விருதை பிஜு மேனன் பெற இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.