ஒரு படத்துக்கு 200 கோடி சம்பளமா? இந்தியாவின் காஸ்ட்லி வில்லன் இவர் தான்!
இந்தியாவிலே அதிக சம்பளம் வாங்கும் வில்லன் நடிகர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஒரு படத்திற்கு மட்டும் ரூ.200 கோடி சம்பளமாக வாங்கி வருகிறாராம். அந்த நடிகர் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

Highest Paid Villain Actor in India : ஒரு படம் ஹிட்டாக அதில் நடிக்கும் ஹீரோ கேரக்டர் எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு வில்லன் கேரக்டரும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஹீரோவை மிகவும் மாஸாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு வில்லன் கேரக்டரும் மிகவும் பவர்ஃபுல் ஆனதாக இருக்க வேண்டும். முன்பு வில்லன் கேரக்டரில் நடிப்பதற்காகவே சில நடிகர்கள் இருப்பார்கள். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஹீரோக்களே வில்லன் கேரக்டரில் துணிச்சலாக நடிக்க தொடங்கிவிட்டார்கள்.
Villain Actor
வில்லனாக மாறும் ஹீரோக்கள்
குறிப்பாக நடிகர் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் வில்லனாக பான் இந்தியா படங்களில் நடித்து பாப்புலர் ஆகிவிட்டார்கள். கமல் கல்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக ஜவான் படத்திலும், பஹத் பாசில், அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புஷ்பா 2 படத்திலும் நடித்திலும் நடித்திருந்தார். இந்த மூன்று நடிகர்களும் ஹீரோவாக நடித்த படங்களைக் காட்டிலும் அவர் வில்லனாக நடித்த படங்கள் 1000 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் வெற்றிபெற்றன.
இதையும் படியுங்கள்... கோடிகளில் சம்பளம் தந்தும்; பான் மசாலா விளம்பரங்களை தூக்கியெறிந்த டாப் 5 நடிகர்கள்
Yash
200 கோடி சம்பளம் வாங்கும் வில்லன்
ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் வில்லனாக நடிப்பதற்கு சம்பளமும் வாரி வழங்கப்படுகிறது. அந்த வகையில், கமல்ஹாசன் வில்லனாக நடிக்க 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய நடிகர் என்கிற பெருமையை பெற்றிருந்த நிலையில், தற்போது அவரை மிஞ்சும் அளவுக்கு ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்கி உள்ளார் பிரபல நடிகர்... அவர் வேறுயாருமில்லை கேஜிஎப் படத்தில் ராக்கி பாய் ஆக நடித்து ரசிகர்களை கவர்ந்த யாஷ் தான்.
Yash Upcoming Movies
யாஷ் கைவசம் உள்ள படங்கள்
யாஷ் நடிப்பில் தற்போது டாக்ஸிக் என்கிற பான் இந்தியா திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் யாஷ், மற்றொரு பான் இந்தியா படத்தில் வில்லனாக நடிக்க கமிட்டாகி உள்ளார். அந்த படத்திற்காக தான் அவருக்கு ரூ.200 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
Yash Salary
ராவணனாக நடிக்கும் யாஷ்
அந்த படத்தின் பெயர் ராமாயணம். இந்தியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ராமனாக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இந்த படத்தில் வில்லன் ராவணன் கதாபாத்திரத்தில் யாஷ் நடிக்க கமிட்டாகி உள்ளார். இந்த கேரக்டரில் நடிக்க தான் அவருக்கு ரூ.200 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவிலேயே வில்லனாக நடிக்க 200 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்கிற பெருமையை யாஷ் பெற்றிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நயன்தாரா தம்பியாக யாஷ் நடிக்கும் டாக்சிக்; அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!