MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Hi OTT Release : ஹாய் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... அப்படத்தின் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Hi OTT Release : ஹாய் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... அப்படத்தின் லைஃப் டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?

Hi Movie OTT Release Date : விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இருவரும் ஜோடியாக நடித்த ஹாய் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Sep 23 2026, 08:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hi Movie OTT Release Date
Image Credit : X

Hi Movie OTT Release Date

நயன்தாரா மற்றும் கவின் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ஜீ5 நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது ஓடிடி வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 25-ம் தேதி முதல் ஜீ5 தளத்தில் ‘ஹாய்’ திரைப்படத்தை பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hi Review : கவின் - நயன்தாராவின் காதல் விருந்து அடிபொலியாக இருந்ததா? ஹாய் முழு விமர்சனம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதல் முறையாக இணைந்த நயன்தாரா - கவின்
Image Credit : X/@7screenstudio

முதல் முறையாக இணைந்த நயன்தாரா - கவின்

‘ஹாய்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக நயன்தாரா மற்றும் கவின் கூட்டணி அமைந்தது. இருவரும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால், படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்தது. காதல் கதைக்களத்துடன் குடும்ப உறவுகளையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், நயன்தாரா மற்றும் கவினின் கதாபாத்திரங்களைச் சுற்றியே முக்கியமான சம்பவங்கள் நகர்கின்றன. இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒட்டுமொத்தமாக ரூ.14.90 கோடி வசூல் செய்திருந்ததாக சாக்னில்க் தரவுகள் தெரிவிக்கின்றன.

35
பாடலாசிரியரில் இருந்து இயக்குநராக விஷ்ணு எடவன்
Image Credit : X

பாடலாசிரியரில் இருந்து இயக்குநராக விஷ்ணு எடவன்

‘ஹாய்’ படத்தின் மூலம் பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். தமிழ் சினிமாவில் ஏற்கனவே பாடலாசிரியராக கவனம் பெற்ற இவர், விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் ‘பொலக்கட்டும் பர பர’ மற்றும் ‘லியோ’ படத்தின் ‘பேடாஸ்’ உள்ளிட்ட பாடல்களை எழுதியுள்ளார். தனது முதல் இயக்கத்திலேயே நயன்தாரா, கவின் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படத்தை உருவாக்கியுள்ளார்.

45
காதல், குடும்பம் என கலவையான கதை
Image Credit : instagram

காதல், குடும்பம் என கலவையான கதை

அக்கம்பக்கத்தில் வசிக்கும் இருவருக்கு இடையே ஏற்படும் அறிமுகம், ஈர்ப்பு மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகும் காதல் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நயன்தாரா, கவின் ஆகியோருடன் ராதிகா சரத்குமார், பிரபு, சத்யன், வி.டி.வி. கணேஷ், அம்ருதா சீனிவாசன், குரேஷி, ஆதித்யா கதிர், காவ்யா அறிவுமணி, பெப்சி விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மறைந்த நடிகரும் இயக்குநருமான பாக்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

55
செப்டம்பர் 25 முதல் ஜீ5-ல் ‘ஹாய்’
Image Credit : X

செப்டம்பர் 25 முதல் ஜீ5-ல் ‘ஹாய்’

திரையரங்குகளில் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியான ‘ஹாய்’ திரைப்படம் தற்போது தனது அடுத்த பயணத்தை ஓடிடியில் தொடங்குகிறது. செப்டம்பர் 25 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கு இந்த ஓடிடி வெளியீடு புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக நயன்தாரா - கவின் கூட்டணியை ஓடிடியில் காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Nayanthara Fitness: ஜிம், டயட் எதுவுமே இல்லையா? 41 வயதில் நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
ஓடிடி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : கோடையில் மழை வரவச்ச இசைஞானியின் பாடல்... இளையராஜா இசைக்கு இப்படியொரு பவரா?
Recommended image2
Ambika Vs Radha: ரூ.97 கோடி வர வேண்டும்..காசோலையை ராதாதான் கொடுத்தார் - அம்பிகா பரபரப்பு குற்றச்சாட்டு
Recommended image3
The Paradise Movie First Review : நானியின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? 'தி பாரடைஸ்' முதல் விமர்சனம் இதோ
Related Stories
Recommended image1
OTT Releases : டாக்ஸிக் முதல் ஹபீபி வரை... ஓடிடியில் இந்த வாரம் ஸ்ட்ரீம் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட்
Recommended image2
OTT : மகளை பழிவாங்கும் தந்தையின் கதை... வெற்றிமாறன் இயக்கிய இந்த வெப் சீரிஸ் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved