- Home
- Cinema
- Nayanthara Fitness: ஜிம், டயட் எதுவுமே இல்லையா? 41 வயதில் நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
Nayanthara Fitness: ஜிம், டயட் எதுவுமே இல்லையா? 41 வயதில் நயன்தாராவின் ஃபிட்னஸ் ரகசியம் என்ன தெரியுமா?
Nayanthara Fitness: 40 வயசைக் கடந்த பிறகும் நயன்தாராவின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் லேடி சூப்பர்ஸ்டார், கடுமையான டயட், ஜிம் வொர்க்கவுட் இல்லாமல் எப்படி ஃபிட்டாக இருக்கிறார் என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.
16

Image Credit : others
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா
தென்னிந்தியாவின் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று புகழப்படுபவர்தான் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 20 வருடங்களாக சினிமா துறையில் இருந்தாலும், அவரது அழகு, ஃபிட்னஸ், நடிப்பில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது 41 வயதிலும் அதே எனர்ஜி, அதே கிளாமரான லுக்கில் ரசிகர்களை அசர வைக்கிறார்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்
26
Image Credit : X
'டாக்ஸிக்' படத்தில் பவர்ஃபுல் ரோல்
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகும் நயன்தாராவிடம் பெரிய மாற்றம் எதுவும் தெரியவில்லை. சமீபத்தில், கன்னட ஸ்டார் யஷ் உடன் 'டாக்ஸிக்' படத்தில் ஒரு பவர்ஃபுல் ரோலில் நடித்து செய்திகளில் இடம்பிடித்தார். அப்படியென்றால், இந்த வயதிலும் நயன்தாரா தனது அழகை எப்படிப் பராமரிக்கிறார் தெரியுமா?
36
Image Credit : X
பிடித்த உணவை அளவோடு சாப்பிடும் நயன்
ஒரு காலத்தில் டயட் என்றால், கடுமையான விதிகளைப் பின்பற்றி, பிடிக்காத உணவைச் சாப்பிட வேண்டும் என்று நயன்தாரா நினைத்தாராம். ஆனால், போகப்போக அவரது சிந்தனை மாறிவிட்டது. உடம்பை வருத்திக்கொண்டு பட்டினி கிடப்பதற்குப் பதிலாக, உடலுக்குத் தேவையான சத்துக்களை சரியான அளவில் கொடுப்பதே உண்மையான டயட் என்று இப்போது நம்புகிறார். அதனால், தனக்கு பிடித்த உணவை அளவோடு சாப்பிடவே அவர் விரும்புகிறார்.
46
Image Credit : Instagram
தினமும் யோகா செய்யும் லேடி சூப்பர்ஸ்டார்
நயன்தாரா பெரிதாக டயட் பின்பற்றுவதில்லை, ஜிம்மில் மணிக்கணக்கில் வொர்க்கவுட்டும் செய்வதில்லை. ஃபிட்னஸை தனது அன்றாட வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றிக்கொண்டார். தினமும் தவறாமல் வெயிட் ட்ரெய்னிங்கிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இதனுடன், தனது ஃபிட்னஸுக்காக யோகாவையும் தினசரி வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். நீண்ட ஷூட்டிங் ஷெட்யூல்களுக்குப் பிறகு, உடலையும் மனதையும் அமைதியாக வைத்திருக்கவும், இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் யோகா அவருக்கு மிகவும் உதவுகிறது.
56
Image Credit : Asianet News
வீட்டு சாப்பாட்டுக்கு முதல் முன்னுரிமை
ஷூட்டிங் இடங்களிலோ அல்லது பயணத்திலோ விதவிதமான உணவு கிடைத்தாலும், நயன்தாரா எப்போதுமே வீட்டில் செய்த எளிய உணவை சாப்பிடவே விரும்புகிறார். ஷூட்டிங்கிற்குச் செல்லும்போதும் வீட்டிலிருந்துதான் லஞ்ச் பாக்ஸ் எடுத்துச் செல்கிறார். இது ஜங்க் ஃபுட்டிலிருந்து விலகி இருக்கவும், ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. தனது தினசரி உணவில் பழங்கள், ஃப்ரெஷ் காய்கறிகள், முட்டை மற்றும் லீன் மீட் (கொழுப்பில்லாத இறைச்சி) அடங்கிய சரிவிகித உணவை எடுத்துக்கொள்கிறார்.
66
Image Credit : our own
உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருத்தல்
சருமம் பளபளப்பாக இருக்க, உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். நயன்தாராவின் முகம் மற்றும் சருமம் ஜொலிப்பதற்கு இந்த முறைதான் காரணம். இதற்காக அவர் தினமும் நிறைய தண்ணீர், கிரீன் டீ, ஃப்ரெஷ் பழச்சாறுகள் மற்றும் சூப்களை அருந்துகிறார். இதனுடன், எவ்வளவு பிஸியாக இருந்தாலும், தினமும் குறைந்தது 8 மணிநேர தூக்கத்திற்கு நயன்தாரா முக்கியத்துவம் கொடுக்கிறார். சரியான தூக்கம், சரிவிகித உணவு மற்றும் தினசரி உடற்பயிற்சிதான் நயன்தாராவின் அழகின் உண்மையான ரகசியம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos

