MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரே நாளில் மோதும் நயன்தாரா-சூர்யா படங்கள்... ஆகஸ்ட் மாதம் பாக்ஸ் ஆபிஸில் செம சம்பவம் வெயிட்டிங்

ஒரே நாளில் மோதும் நயன்தாரா-சூர்யா படங்கள்... ஆகஸ்ட் மாதம் பாக்ஸ் ஆபிஸில் செம சம்பவம் வெயிட்டிங்

Suriya vs Nayanthara : நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் மற்றும் நயன்தாரா நடித்துள்ள ஹாய் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 22 2026, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vishwanath And Sons vs Hi
Image Credit : X

Vishwanath And Sons vs Hi

நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் 'Hi' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சுவாரஸ்யமாக, இதே நாளில் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படமும் ரிலீஸ் ஆவதால், பாக்ஸ் ஆபிஸில் பெரிய போட்டி உருவாகியுள்ளது. நயன்தாராவின் 'Hi' திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தை விஷ்ணு இடவன் எழுதி இயக்கியுள்ளார். விக்னேஷ் சிவன், நயன்தாரா மற்றும் எஸ்.எஸ். லலித் குமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். நயன்தாரா, கவின் உடன் பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு, விடிவி கணேஷ், சத்யன் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சூர்யா vs நயன்தாரா
Image Credit : our own

சூர்யா vs நயன்தாரா

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ரிலீஸ் டேட் ப்ரோமோ' என்ற தலைப்பில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், நயன்தாரா கையில் கத்தியுடன் நிற்க, மழையில் இருந்து தப்பிக்க ரெயின்கோட் அணிந்தபடி கவின் பைக்-ல் அவரது வீட்டிற்கு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிரும்போது, தயாரிப்பாளர்கள், "உங்கள் இதயத்தை திருடப் போகும் ஒரு கதைக்கான தேதி இப்போது உறுதியாகிவிட்டது. U/A சான்றிதழுடன், ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளுக்கு வருகிறது!" என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். நயன்தாரா மற்றும் கவின் நடிக்கும் 'Hi' படத்திற்கு போட்டியாக, சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படமும் அதே ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகிறது.

Related Articles

Related image1
Suriya : கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூலை ரிலீஸுக்கு முன்பே வாரிசுருட்டிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
Related image2
Nayanthara Photos : இன்ஸ்டாவில் வைரலாகும் நயன்தாராவின் திருமண நாள் புகைப்படங்கள்!
34
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
Image Credit : stockPhoto

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் & ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் பேனர்களின் கீழ் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் சூர்யா, ஒரு முன்னாள் பிஸ்டல் ஷூட்டராக நடிக்கிறார். தன்னை விட 20 வயது குறைவான மாமிதா மீது காதல் கொள்கிறார். பல விருதுகளை வென்று பெரிய சாதனையாளராக இருந்தாலும், அமைதியான, ஒழுக்கமான, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வாழும் ஒருவராக அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

44
பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது யார்?
Image Credit : youtube

பாக்ஸ் ஆபிஸில் வெல்லப்போவது யார்?

இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் ஹைதராபாத்தில் நடந்த ஒரு பாரம்பரிய பூஜை விழாவுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. அதன்பின்னர் விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி முடித்து இந்த ஆண்டு ஜூலை மாதமே ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அதன் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றப்பட்டது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் நயன்தாரா படத்துடன் மோத உள்ளதால், பாக்ஸ் ஆபிஸில் யார் வெற்றியை ருசிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jana Nayagan: 'ஜன நாயகன்' வேற கதை, 'பகவந்த் கேசரி' பார்க்கச் சொன்னதே விஜய் தான்..
Recommended image2
Baahubali : பாகுபலியில் நீங்கள் யார்? உங்க பிறந்த தேதி சொன்னா போதும்!
Recommended image3
Jana Nayagan படத்துக்காக நடிகர், நடிகைகளுக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம்... விஜய்க்கு 220 கோடி; அப்போ மத்தவங்களுக்கு?
Related Stories
Recommended image1
Suriya : கருப்பு படத்தின் லைஃப் டைம் வசூலை ரிலீஸுக்கு முன்பே வாரிசுருட்டிய 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'
Recommended image2
Nayanthara Photos : இன்ஸ்டாவில் வைரலாகும் நயன்தாராவின் திருமண நாள் புகைப்படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved