MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • Hi Review : கவின் - நயன்தாராவின் காதல் விருந்து அடிபொலியாக இருந்ததா? ஹாய் முழு விமர்சனம்

Hi Review : கவின் - நயன்தாராவின் காதல் விருந்து அடிபொலியாக இருந்ததா? ஹாய் முழு விமர்சனம்

Hi Movie Review : விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ஹாய் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Aug 28 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Hi Movie Review
Image Credit : X

Hi Movie Review

கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஹாய்’. விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு முத்துச்செல்வன் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனப் பங்களிப்பை வழங்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், ரவுடி பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார், நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் உமேஷ்குமார் பன்சால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

Hi Movie First Review : கவின் - நயன் ஜோடி பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? ஹாய் படத்தின் முதல் விமர்சனம் இதோ

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஹாய் படத்தின் கதை என்ன?
Image Credit : X

ஹாய் படத்தின் கதை என்ன?

தனது பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு, எதிர்பார்த்த காதல் அமையவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவருக்கு பெண் பார்க்கத் தொடங்குகின்றனர். ஆனால், காதல் திருமணத்தில்தான் உறுதியாக இருக்கும் கவின், குடும்பத்தினருக்கு கடிதம் மூலம் தனது எதிர்ப்பை தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

மறுபுறம், தாயின் அன்பு கிடைக்காமலும், தந்தையின் அரவணைப்பை முழுமையாக அனுபவிக்காமலும் வளர்ந்தவர் நயன்தாரா. திருமண வாழ்க்கைக்குள் சிக்கிக் கொள்ளாமல், தனது சொந்த காலில் நின்று சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது. ஆனால், எதிர்பாராத விதமாக அவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. விருப்பமில்லாத இந்தத் திருமணத்தை தவிர்ப்பதற்காக அவரும் வீட்டை விட்டு சென்னைக்கு வருகிறார்.

சென்னையில் இருவரும் சந்தித்துக் கொள்ள, ஆரம்பத்தில் நட்பாக பழகத் தொடங்குகின்றனர். நயன்தாரா தான் தனது மனதில் உருவாக்கி வைத்திருந்த காதலிக்கான எதிர்பார்ப்புகளுக்கு பொருத்தமானவர் என்று கவின் நினைக்கிறார். இதனால் அவர் நயன்தாரா மீது காதல் கொள்ளத் தொடங்குகிறார். ஆனால், காதல் மற்றும் திருமணம் மீது தனக்கு பெரிய நம்பிக்கை இல்லை என்பதை நயன்தாரா வெளிப்படுத்துகிறார்.

இதனால் தனது காதலை வெளிப்படையாக சொல்லாமல் கவின் மனதுக்குள்ளேயே வைத்துக் கொள்கிறார். இதற்கிடையே எதிர்பாராத சூழல் காரணமாக இருவரும் சில காலம் கணவன் - மனைவியாக நடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நயன்தாராவின் மனதை மாற்றி தனது காதலை ஏற்றுக்கொள்ள வைக்க கவின் முயற்சி செய்கிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதுதான் ‘ஹாய்’ படத்தின் மீதிக்கதை.

36
கவின் நடிப்பு எப்படி?
Image Credit : instagram

கவின் நடிப்பு எப்படி?

கோவை மற்றும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இளைஞர் கதாபாத்திரத்தில் கவின் நடித்துள்ளார். காதலுக்கான ஏக்கம், அது கிடைக்காததால் ஏற்படும் ஏமாற்றம் என கதாபாத்திரத்தின் பல்வேறு உணர்வுகளை தனது நடிப்பில் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நயன்தாராவுடன் இருக்கும் வயது வித்தியாசம் சில இடங்களில் தெரிந்தாலும், கவினின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் முதிர்ச்சியான நடிப்பு அந்தக் குறையை பெரும்பாலும் சமாளிக்கிறது.

காதல் காட்சிகளில் மட்டுமின்றி, நகைச்சுவை கலந்த தருணங்களிலும் அவர் ரசிகர்களை ஈர்க்கிறார். குறிப்பாக கவினின் நண்பர்கள் கதாபாத்திரங்களில் வரும் சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி ஆகியோரின் காட்சிகள் படத்திற்கு நல்ல நகைச்சுவைத் தருணங்களை வழங்குகின்றன. சத்யனின் மைண்ட் வாய்ஸ் காட்சிகளும் தியேட்டரில் சிரிப்பை வரவழைக்கக்கூடியதாக அமைந்துள்ளன.

46
நயன்தாரா எப்படி?
Image Credit : X

நயன்தாரா எப்படி?

கொங்கு பகுதியைச் சேர்ந்த பெண் கதாபாத்திரமாக நயன்தாரா நடித்திருந்தாலும், அவரது வழக்கமான திரை பாணி பெரிதாக மாறவில்லை. நவீன உடைகள் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் திரையில் அவர் தனி கவனம் பெறுகிறார். அவரது அனுபவம் வாய்ந்த நடிப்பு பல காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது. அதே நேரத்தில், சில காட்சிகளில் அவரது வயது முதிர்ச்சி கதாபாத்திரத்துடன் முழுமையாக பொருந்தாதது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக கவினுடன் இணைந்து வரும் சில காட்சிகளில் இந்த வித்தியாசம் பார்வையாளர்களின் கவனத்திற்கு வரக்கூடும். இருப்பினும், அவரது ஸ்கிரீன் பிரசன்ஸும், நடிப்பும் படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்றாகவே இருக்கிறது.

கவினின் பெற்றோராக ராதிகா மற்றும் கே.பாக்யராஜ் நடித்துள்ளனர். நயன்தாராவின் தந்தை கதாபாத்திரத்தில் பிரபு நடித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் சுஹாசினி மணிரத்னமும் இடம்பெற்றுள்ளார். இந்த அனுபவம் வாய்ந்த நடிகர்களின் நடிப்பு படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. மேலும், விடிவி கணேஷ், ஃபெப்சி விஜயன், காவியா அறிவுமணி, மிர்ச்சி கெமி, அம்ருதா சீனிவாசன் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கிடைத்த சிறிய கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.

56
தொழில்நுட்ப அம்சங்கள்
Image Credit : stockPhoto

தொழில்நுட்ப அம்சங்கள்

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா படத்தை அழகான வண்ணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக நயன்தாராவின் தோற்றம் திரையில் பளிச்சிடும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜென் மார்ட்டினின் இசையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்துகின்றன. காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு அவரது பின்னணி இசை கூடுதல் பலம் சேர்க்கிறது.

பிலோமின் ராஜின் படத்தொகுப்பு படத்தின் எளிமையான கதையை சீராக நகர்த்துகிறது. இயக்குநர் விஷ்ணு எடவன், பெரிய திருப்பங்கள் எதையும் நம்பாமல் கதாபாத்திரங்களின் உறவுகள் மற்றும் அவர்களுக்கு இடையேயான உணர்வுகளை வைத்தே படத்தை நகர்த்தியிருக்கிறார்.

66
மொத்தத்தில் ‘ஹாய்’ எப்படி இருக்கு?
Image Credit : stockPhoto

மொத்தத்தில் ‘ஹாய்’ எப்படி இருக்கு?

‘ஹாய்’ படத்தில் மிகப்பெரிய திருப்பங்களையோ, எதிர்பாராத திரைக்கதை மாற்றங்களையோ எதிர்பார்க்க முடியாது. தொடக்கம் முதல் முடிவு வரை கதை செல்லும் பாதையை ஓரளவுக்கு எளிதாக கணிக்க முடிகிறது. ஆனால், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு, நகைச்சுவை காட்சிகள், காதல் உணர்வுகள் மற்றும் குடும்பப் பின்னணி ஆகியவற்றை வைத்து பார்வையாளர்களை மகிழ்விக்க இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார்.

குறிப்பாக கவினின் அளவான நடிப்பு, நகைச்சுவை காட்சிகள், அனுபவம் வாய்ந்த நடிகர்களின் பங்களிப்பு ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. மறுபுறம், கவின் - நயன்தாரா ஜோடியின் வயது வித்தியாசம் சில காட்சிகளில் இயல்புத்தன்மையை குறைப்பது படத்தின் குறையாக தெரிகிறது. பெரிய சிக்கலான கதையை எதிர்பார்க்காமல், இலகுவான காதல் மற்றும் குடும்ப நகைச்சுவை திரைப்படமாக பார்க்க விரும்புபவர்களுக்கு ‘ஹாய்’ ஒரு ரசிக்கக்கூடிய அனுபவமாக அமையலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
விமர்சனம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sigma Review by Blue Sattai : சிக்மா படத்தின் மிகப்பெரிய மைனஸ் இதுதான்... விமர்சனத்தில் புட்டு புட்டு வைத்த ப்ளூ சட்டை மாறன்
Recommended image2
Sigma Review : இயக்குநராக ஜெயித்தாரா ஜேசன் சஞ்சய்? சிக்மா முழு விமர்சனம் இதோ
Recommended image3
Dont Trouble The Trouble Review : ஃபகத் ஃபாசிலின் மேஜிக் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? டோண்ட் டிரபிள் த டிரபிள் விமர்சனம்
Related Stories
Recommended image1
KudikaraNenju: துருவ் விக்ரம் குரலில் ‘குடிகார நெஞ்சு’.. ‘ஹாய்’ படத்திற்கு ஏறும் ஹைப்
Recommended image2
Theatre and OTT Releases : டாக்ஸிக் vs ஹாய்... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் செம ட்ரீட் வெயிட்டிங்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved