- Home
- Cinema
- பிரபல நடிகருடன் அர்ஜுன் பட ஹீரோயின் ஹரி பிரியாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படங்கள்!
பிரபல நடிகருடன் அர்ஜுன் பட ஹீரோயின் ஹரி பிரியாவிற்கு நடந்த நிச்சயதார்த்தம்! வெளியான புகைப்படங்கள்!
பிரபல கன்னட நடிகையான ஹரி பிரியா, பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் கன்னட நடிகர் வசிஷ்டா சிம்ஹாவை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு துலுமொழி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஹரி பிரியா. இதை தொடர்ந்து, கன்னட மொழியில் கடந்த 2008 ஆண்டு இவர் நடித்த Manasugula Mathu Madhura திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரை கன்னட ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது.
இதை தொடர்ந்து பல கன்னட மொழி படங்களில் இவர் பிசியாக நடித்து வந்தாலும், சில தெலுங்கு மொழி மற்றும் தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
அந்த வகையில், தமிழில் நடிகர் கரண் ஹீரோவாக நடித்த, 'கனகவேல் காக்க' என்கிற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர், இதை தொடர்ந்து அர்ஜுனுக்கு ஜோடியாக வல்லக்கோட்டை, சேரன் மற்றும் பிரசன்னா இணைந்து நடித்த முரண் ஆகிய படங்களில் நடித்தார்.
இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வெற்றிபெறாத நிலையில், தொடர்ந்து கன்னட திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் இவர் பிரபல கன்னட நடிகர் வசிஷ்டா சிம்ஹாவுடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் சிங்கம் கையில் ஒரு பெண் குழந்தை இருப்பது போன்ற ஒரு போஸ்டை பதிவிட்டு, அன்பே நான் உன் கையில் இருக்கிறேன் என உருக்கமாக கூறியிருந்தார்.
இதற்க்கு நடிகரும்... நான் எப்போதும் உன் நிழலாக இருக்கிறேன் என பதில் பதிவு போட்டு தங்களின் காதலை உறுதி செய்த நிலையில், இவர்களுடடிய திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்தது. மிகவும் எளிமையான முறையில் நடந்த இவர்களின் நிச்சயதார்த்தில் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகை ஹரி பிரியா மிகவும் எளிமையாக மஞ்சள் நிற புடவையில் அழகு தேவதை போல் மின்னினார். நடிகர் வசிஷ்டா சிம்ஹாவும், மஞ்சள் நிற உடையில் இருந்தார். இந்நிலையில் இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர்களே தங்களின் சமூக வலைத்தளத்தில் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.