Alya Manasa: விஜய் டிவியில் இருந்து... சன் டிவிக்கு தாவியதும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய ஆல்யா மானசா!
விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் தற்போது சன் டிவி சீரியலில் இந்த வாரம் திங்கள் கிழமை முதல், ஒளிபரப்பாகி வரும் 'இனியா' சீரியலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலுக்காக அவர் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறினர்.
இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், சஞ்சீவ் தொடர்ந்து சீரியலில் கவனம் செலுத்தி வந்தாலும், ஆல்யா முதல் குழந்தை பெற்றெடுத்த பின்னர் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார். அந்த வகையில் 'ராஜா ராணி 2' சீரியலில் இவர் நடித்து வந்த போது, இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.
சமீபத்தில் ஆல்யா - சஞ்சீவ் ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்த நிலையில்... சில மாதங்களிலேயே மீண்டும் சீரியலில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். இவர்கள் இருவருமே முதலில் அறிமுகமானது விஜய் டிவி தொடரில் என்றாலும், தற்போது சன் டிவி தொடரில் நடித்து வருகிறார்கள். சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வரும், 'கயல்' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது ஆல்யாவும் சன் டிவி தொடரில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடித்து வரும் 'இனியா' என்கிற தொடர்... இந்த வாரம் திங்கள் கிழமை முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனாக நடிகர் ரிஷி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக தான் இருக்க வேண்டும், என்கிற காணோட்டத்தில் இருக்கும் ரிஷி வாழ்க்கையில் ஆல்யா எப்படி நுழைகிறார். அவரை எப்படி மாறுகிறார்... என்பதே இந்த சீரியலின் கதைக்கருவாக உள்ளது.
விஜய் டிவி சீரியலில் நடித்து வந்த போது ஆல்யா மானசா.... 12 முதல் 15 ஆயிரம் வரை மட்டுமே சம்பளமாக பெற்று வந்த நிலையில், சன் டிவிக்கு மாறியதும், 20 ஆயிரம் சம்பளமாக பெற்று வருவதாக கூறப்படுகிறது.