சினிமாவில் பாலியல் தொல்லை? திரையுலகை விட்டே விலகிவிடுவேன்! கீர்த்தி சுரேஷின் முடிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை குறித்து, முதல் முறையாக வாய்திறந்துள்ளார். மேலும் இவரின் அதிரடி முடிவு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.
திரை உலகில் சில நடிகைகள் இதுவரை தாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது இல்லை என கூறி வந்தாலும், பல நடிகைகள் இது போன்ற பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கூட, நடிகைகள் பலர் வெளிப்படையாக மீடூ என்கிற ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பகிரங்கமாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனக்கு பாலியல் தொல்லை சினிமாவில் நேர்ந்தால் எப்படி நடந்து கொள்வேன் என வெளிப்படையாக கூறி ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
ஆரோக்கியம் மற்றும் சமூக சேவைக்கான டாக்டர் பட்டம் பெற்ற நடிகை கௌதமி..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, இதுவரை தனக்கு பாலியல் தொல்லை எதுவும் நேர்ந்ததில்லை. அப்படி ஒரு எண்ணத்தில் இதுவரை யாரும் என்னை நெருங்கியதும் இல்லை. ஆனால் என்னிடம் சில நடிகைகள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வெளிப்படையாக கூறியுள்ளனர்.
ஒருவேளை, எதிர்காலத்தில், அது போல் யாராவது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் அப்படி பட்ட பட வாய்ப்பே எனக்கு வேண்டாம் என கூறி விடுவேன். சினிமாவை தேவையில்லை என வேறு வேலை கூட பார்க்க சென்று விடுவேன் என அதிரடியாக கூறியுள்ளார்.
பிரபல மலையாள தயாரிப்பாளரான சுரேஷ் மற்றும் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளான கீர்த்தி சுரேஷ், குழந்தை நட்சத்திரமாக மலையாள திரை உலகில் காலடி எடுத்து வைத்து... தற்போது ஹீரோயினாக நடித்து வருகிறார்.
தமிழில் 'இது என்ன மாயம்' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ். இந்த படம் வெற்றிபெறவில்லை என்றாலும், சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. பின்னர் தொடரை, பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த போது சில விமர்சனங்களை சந்தித்த கீர்த்தி சுரேஷ், இப்படி பட்ட விமர்சனங்கள் அனைத்திற்கும், சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமான 'மகாநடி' படம் மூலம் பதிலடி கொடுத்தார். இந்த படத்திற்காக, சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
keerthy suresh
தற்போது முன்னணி ஹீரோயின்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தசரா, சைரன், மாமன்னன், மற்றும் ரவி தாத்தா போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.