திருமண கொண்டாட்டத்தில் பிசியான ஹன்சிகா... வருங்கால கணவருடன் காத்துவாக்குல காதல் செய்யும் போட்டோஸ் வைரல்
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. இவருக்கு வருகிற டிசம்பர் 4-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். இவர்களது திருணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமைவாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது.
திருமணத்திற்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், நடிகை ஹன்சிகாவின் திருமண கொண்டாட்டம் தற்போதே களைகட்டத் தொடங்கி உள்ளது. பாரம்பரிய முறைப்படி நடைபெற உள்ள ஹன்சிகாவின் திருமணத்திற்கான சடங்குகள் தற்போதே தொடங்கி விட்டன. நேற்று மட்டா கி சவுகி என்கிற சடங்கு நடந்தது.
இதையும் படியுங்கள்... திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?
இதில் தனது வருங்கால கணவர் சோஹைல் கதூரியா உடன் நடிகை ஹன்சிகா எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரும் சிகப்பு நிற மேச்சிங் மேச்சிங் உடையில் காத்துவாக்குல காதல் செய்யும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதற்கு லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
நடிகை ஹன்சிகா தனது திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதோடு அதற்கான வீடியோ ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவரது திருமணத்தில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!