MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?

திருமணத்திற்காக நயன்தாரா செஞ்ச விஷயத்தை அப்படியே காப்பி அடிக்கும் ஹன்சிகா... என்ன பண்ணபோகிறார் தெரியுமா?

நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் சோஹைல் கதூரியா என்பவருடன் ஜெய்ப்பூரில் உள்ள பிரம்மாண்ட அரண்மனையில் திருமணம் நடைபெற உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 13 2022, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

திரைப்பிரபலங்களின் திருமணம் என்பது சமீபகாலமாக வியாபாரம் ஆகி வருகிறது. இதன்மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற நடிகை நயன்தாராவின் திருமணத்தை வீடியோ ஒளிபரப்பு செய்யும் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருந்தது.

24

இதன் காரணமாக திருமணத்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் வீடியோ எடுக்கவோ, புகைப்படம் எடுக்கவோ அனுமதி அளிக்கப்படவில்லை. இவ்வாறு கடும் கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால் சில முன்னணி நட்சத்திரங்கள் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள விருப்பம் காட்டவில்லை என கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்... அய்யோ இவங்களா! பிக்பாஸ் 6ல் வைல்டு கார்டு எண்ட்ரிக்கு தயாராகும் பிரபல விஜே- அப்போ இனி சண்டைக்கு பஞ்சமிருக்காது

34

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடிக்கு திருமணமாகி குழந்தைகளே பிறந்துவிட்டது. ஆனால் இன்னும் இவர்களது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை. அது எப்போ ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்தும் இதுவரை எந்தவித அப்டேட்டும் வெளியாகவில்லை. இது ஒருபுறம் இருக்க தற்போது நடிகை ஹன்சிகாவும் இதே பார்முலாவை பின்பற்ற உள்ளாராம்.

44

நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. இவர் சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... வெளுத்து வாங்கிய மழை... வீட்டை வெள்ளம் சூழ்ந்ததால் பதறிப்போய் வீடியோ வெளியிட்ட பிரபல இசையமைப்பாளர்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
சந்தாவை திருமணம் செய்ய மறுக்கும் சேரன்... நிலாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Ethirneechal: எதிர்நீச்சலில் மெகா ட்விஸ்ட்! கோலங்கள் நாயகியின் மிரட்டலான கம்பேக்! இனி ஆதி குணசேகரனுக்கு ஆப்பு கட்டாயம்.!
Recommended image3
அஜித்தை போலவே துபாயில் சிக்கிய முன்னணி தமிழ் நடிகர்! போர் பதற்றத்தின் நடுவே வெளியிட்ட உருக்கமான பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved