வீட்டின் முன் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதை வீடியோ எடுத்து அதனை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பெரும்பாலான பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும், சந்தோஷ் நாராயணன், தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வீட்டின் முன் வெள்ள நீர் சூழ்ந்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையும் படியுங்கள்... Samantha: கண்கலங்க வைக்கும் சமந்தாவின் நிலை? ஒரு கையில் ஊசி... மற்றொரு கையால் உடல் பயிற்சி ஷாக்கிங் வீடியோ..!

Scroll to load tweet…

தனது வீட்டின் முன் 2 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளதாகவும், தனது வீட்டுக்குள்ளும் மழைநீர் புகுந்துவிட்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், அனைவரும் பாதிகாப்பாக இருக்கிறீர்களா என்கிற கேள்வியுடன் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த அவரது பலோவர்கள் இந்த தகவலை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதையடுத்து அதிரடி நடவடிக்க எடுத்து மழைநீரை அகற்றிய காஞ்சிபுர மாவட்ட கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.தா.மொ.அன்பரசன் ஆகியோர் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள சந்தோஷ் நாராயணன். தனது கொளப்பாக்கம் பகுதி மக்கள் சார்பாக மிக்க நன்றி அய்யா என்று தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... களைகட்டிய 80ஸ் ரீயூனியன்! கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80களில் கோலோச்சிய பிரபலங்கள் சந்திப்பு- வைரலாகும் photos