MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • களைகட்டிய 80ஸ் ரீயூனியன்! கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80களில் கோலோச்சிய பிரபலங்கள் சந்திப்பு- வைரலாகும் photos

களைகட்டிய 80ஸ் ரீயூனியன்! கோலிவுட் முதல் பாலிவுட் வரை 80களில் கோலோச்சிய பிரபலங்கள் சந்திப்பு- வைரலாகும் photos

கொரோனாவுக்கு பிறகு முதல் முறையாக மும்பையில் சந்தித்த எண்பதுகளில் கோலோச்சிய தென்னிந்திய மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களின் ரியூனியன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Nov 13 2022, 10:39 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

1980-களில் திரையுலகில் தடம் பதித்த நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து தங்கள் நட்பை கொண்டாடி வந்தனர். '80ஸ் ரீயூனியன்' என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் 10-வது ஆண்டு கொண்டாட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி, ஐதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்ச்சி அனைவரின் நெஞ்சங்களிலும் நீங்காத நினைவாக இடம்பெற்றது. 

அடுத்த வருட நிகழ்ச்சிக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் '80ஸ் நட்சத்திரங்களின் ரீயூனியன்' நடைபெறவில்லை. 

இந்நிலையில், மூன்று வருட இடைவெளிக்குப் பின் 80ஸ் நட்சத்திரங்களின் சங்கமம் இந்த ஆண்டு மும்பையில் நடைபெற்றது. பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் தென் மாநிலத்தைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். 

இதையும் படியுங்கள்... எந்த ஒரு இளம் நடிகையும் செய்யாத செயல்..! சிம்பு பட நடிகை சித்தி இத்னானியை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

23

ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட வண்ணங்களுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு பெண்களுக்கு வெள்ளி மற்றும் ஆரஞ்சு நிறங்களும், ஆண்களுக்கு சாம்பல் மற்றும் ஆரஞ்சு நிறங்களும் தீம் ஆக அறிவிக்கப்பட்டன. 

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பூனம் தில்லான் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் மேற்கண்ட வண்ணங்களில் அரங்கை தயார் செய்து இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மகாராஷ்டிர மற்றும் உள்ளூர் உணவுகளுக்கு இந்நிகழ்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. விடிய விடிய நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 80ஸ் நட்சத்திரங்கள் அனைவரும் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதுமட்டுமின்றி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த வருட 80ஸ் ரீயூனியன் களைகட்டியது என்றே சொல்லலாம்.

33

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ராஜ்குமார், சரத்குமார், சிரஞ்சீவி, பாக்யராஜ், வெங்கடேஷ், அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், அனில் கபூர், சன்னி தியோல், சஞ்சய் தத், நரேஷ், பானுச்சந்தர் ஆகியோர் கலந்துகொண்டனர். அதேபோல் நடிகைகளைப் பொறுத்தவரையில் சுஹாசினி, குஷ்பூ, ரம்யா கிருஷ்ணன், லிஸ்ஸி, பூர்ணிமா, ராதா, அம்பிகா, சரிதா, சுமலதா, ஷோபனா, ரேவதி, மேனகா, பூனம் தில்லான், நதியா, பத்மினி கே, வித்யா பாலன், டினா அம்பானி, மீனாட்சி சேஷாத்திரி, மது ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேற்கண்ட நட்சத்திரங்கள் தவிர நடிகர் மாதவனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தியதோடு துபாய் விமானத்தை பிடிக்க வேண்டி இருந்ததால் விரைவில் விடை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... பார்த்திபனை அசிங்கப்படுத்திய அமேசான்! வாய்மையே வெல்லும் என எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருமணத்திற்கு முன்பே குழந்தை.! மகள் திவ்யா கருத்துக்கு - சத்யராஜ் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
Recommended image2
கமல்ஹாசனை வற்புறுத்தி இளையராஜா எழுத வைத்த சூப்பர் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
Recommended image3
பாட்டி ஆகப்போகும் ஜோரில் அனிதா விஜயகுமார் - கலக்கலாக நடந்த அருண் விஜய் மருமகள் தியா வளைகாப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved