MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!

Hansika Marriage: தோழியின் கணவருக்கு இரண்டாவது மனைவியாகும் ஹன்சிகா..! வெளியான ஷாக்கிங் தகவல்!

நடிகை ஹன்சிகா தன்னுடைய தோழியின் கணவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Nov 04 2022, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தமிழில் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தவர் ஹன்சிகா. கொழுக்கு மொழுக்கு அழகில் முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை வசீகரித்த ஹன்சிகா, அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
 

27

அந்த வகையில், ஜெயம் ரவி, விஜய், சூர்யா, சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். இவர் சிம்புவுடன் 'வாலு' படத்தில் நடித்த போது, இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை தொடர்ந்து திருமணம் வரை இந்த விஷயம் சென்ற நிலையில், திடீர் கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப்பில் முடிந்தது.

விஜயகாந்த் பட கதையை திருடி... ஷாருக்கானுக்கு பட்டி டிங்கரிங் பார்த்த அட்லீ! தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

37

திருமண வாழ்க்கையில் இருவரும் ஒன்று சேரவில்லை என்றாலும், சிம்பு - ஹன்சிகா இருவருமே நட்பு ரீதியில் பழகி வருகிறார்கள். ஹன்சிகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சிம்பு ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்த, மஹா படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

47

ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால்... ஹன்சிகா திருமணம் செய்து கொண்டு, செட்டில் ஆக முடிவு செய்து விட்டார். இந்த தகவலை உறுதி செய்யும் விதமாக, சமீபத்தில்... வருங்கால கலந்தவர் சோஹைல் புரபோஸ் செய்த காதல் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்தார்.

Yashoda Movie: சமந்தாவின் 'யசோதா' திரைப்படத்தின் சென்சார் தகவல் வெளியானது..!
 

57

இதை தொடர்ந்து, ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் 4 ஆம்  நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தை... ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் நடத்த அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும், எனவே இந்த அரண்மனையை புதுப்பிக்கும் பணிகளும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 

67

ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் ஒருபுறம் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள உள்ள தொழிலதிபர் சோஹைல் கதுரியா யார் என்பதை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? எஸ்கேப்பான அசீம்..!
 

77

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஹன்சிகாவின் தோழி ரிக்கி என்பவரின் கணவர் தான் சோஹைல். கடந்த 2016 ஆம் ஆண்டு சோஹாலுக்கு, ரிங்கியுடன் திருமணம் நடந்த போது, அந்த திருமணத்திற்கு ஹன்சிகாவும் சென்றுள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகிறது. தொழிலதிபர் சோஹைலை ஹன்சிகா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ள தகவல் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved