Biggboss Elimination: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவரா? எஸ்கேப்பான அசீம்..!
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளர், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்தப்படும் டாஸ்குகள் ஒவ்வொரு சீசனுக்கும் வித்தியாசப்பட்டாலும், மாற்றமே இல்லாதது என்றால், அது திங்கள் கிழமை நாமினேஷனும், ஞாயிற்று கிழமை... எலிமினேஷனும் தான்.
பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்து ஒளிபரப்பான 4 சீசன்களுக்கும் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்க்கு முக்கிய காரணம், பிக்பாஸ் வீட்டின் உள்ளே தினமும் அரங்கேறி வரும் அனல் பறக்கும் சண்டைகளும், எதிர்பாராத மாற்றங்களும் தான்.
ஒருபுறம் நிகழ்ச்சி சூடு பிடித்தாலும், மற்றொரு புறம்... ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி வருகிறார். அந்த வகையில் இதுவரை, ஜி.பி.முத்து பிள்ளைகள் பாசத்தினால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார். டான்ஸ் மாஸ்டர் ஷாந்தி மற்றும் அசல் கோளாறு ஆகியோர் மக்கள் ஓட்டுகள் அடிப்படையிலும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதை தொடர்ந்து இந்த வாரம் மொத்தம் 5 போட்டியாளர்கள் பெயர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், 5 போட்டியாளர்களுமே மிகவும் வலுவான போட்டியாளர்கள் என்பதால்... இவர்களில் யார் வெளியேறுவார் என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது.
தற்போது இவர்களில் இந்த வாரம், அதிக வாக்குகள் பெற்று விக்ரமன் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் அசீமும், மூன்றாவது இடத்தில் கதிரவனும், நான்காவது இடத்தில் ஆயிஷாவும் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் மிகவும் குறைவான வாக்குகளுடன், செரீனா ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
எனவே செரீனாவே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவர் என கூறப்படுகிறது. பலரும் அசீம் தான் போட்டியாளர்களிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார் என கூறி வந்த நிலையில், அவர் கிரேட் எஸ்கேப் ஆகியுள்ளார்.
அதே நேரம் பொம்மை டாஸ்கில், ஓவர் ஆக்டிங் நடிப்பால்... பிக்பாஸ் ரசிகர்களின் கோபத்திற்கும், பல்வேறு ட்ரோல்களிலும் சிக்கியதன் காரணமாகவே... செரீனா இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளார் என கூறப்படுகிறது.