- Home
- Cinema
- Hanshika Motwani : என்னது..ஹன்ஷிகாவா இப்படி?..படப்பிடிப்பு தளத்தில் மிக மோசமாக நடந்து கொண்ட பிரபலம்..
Hanshika Motwani : என்னது..ஹன்ஷிகாவா இப்படி?..படப்பிடிப்பு தளத்தில் மிக மோசமாக நடந்து கொண்ட பிரபலம்..
Hanshika Motwani : முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் ஹன்ஷிகா மோத்வானியின் செயல் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Hanshika Motwani
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா இந்தி படங்களில் தனது திரை வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் காந்த்ரி (2008) மற்றும் மஸ்கா (2009) உள்ளிட்ட தெலுங்கு படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார்.
Hanshika Motwani
பெரிய வெற்றியை சுவைக்காத ஹன்ஷிகா தனுஷின் மாப்பிள்ளை படம் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பல படங்களில் முன்னை நாயகர்களுடன் நடித்திருந்தார் ஹன்ஷிகா.
Hanshika Motwani
சமீபத்தில் ஹாரர் பக்கம் திருப்பிய ஹன்ஷிகா சுந்தர் சியின் அரண்மனை படத்தின் இரண்டு பக்கங்களிலும் தோன்றியிருந்தது. இதில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு...Simbu Love story : அடுத்த காதல் அத்தியாயத்தை துவங்கிய STR.. சிம்புவின் முன்னாள் காதலிகள் யார் யார் தெரியுமா?
Hanshika Motwani
முன்னணி நாயகர்களுக்கு நாயகியாகி இருந்தாலும் ஹன்ஷிகா போதுமான படவாய்ப்புகளை பெறாமல் தான் உள்ளார். இதற்கிடையே தனுஷுடனான காதல் சர்ச்சை வேறு.. காதல் அறிவித்த ஆறே மாதத்தில் ரத்து செய்திருந்தனர் இந்த காதல் ஜோடிகள்.
Hanshika Motwani
பின்னர் ஹன்ஷிகா நடிப்பில் உருவான ‘மஹா’ படம் இந்து மதத்தையும் அதன் பெண் துறவிகளையும் கொச்சைப்படுத்துவதாகக் கூறி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த படம் ஹன்ஷிகாவுக்கு பெரும் பின்னடைவை தந்தது என்றே சொல்லாம்..அந்த படத்தின் முதல் போஸ்டரில் ஹன்ஷிகா கஞ்சா புகைப்பது போன்ற காட்சியில் ஹன்ஷிகா போஸ் கொடுத்திருந்தார்.
Hanshika Motwani
அரண்மனை ஓரளவு கைகொடுத்ததை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ஹாரர் மூவியில் நடித்து வருகிறார். சபரி சரவணன் இயக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ஹன்ஷிகா நடித்து வருகிறார். இந்த படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
Hanshika Motwani
இந்த படப்பிடிப்பின் போது ஹன்ஷிகாவின் செயல் மிகுந்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி கொண்டிருந்த சினிமா ஊழியரிடம் ஹன்ஷிகா கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...பிக்பாஸ் பிரபலத்துடன் ஹன்ஷிகா, சாந்தனு...ட்ரெண்டாகும் அனிரூத் ரீல்ஸ்...
Hanshika Motwani
கேமரா மேனுக்கு உதவியாக இருந்த அந்த நபரின் பெயர் அடிக்கடி அழைக்கப்படுவது தனக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக கூறிய ஹன்ஷிகா அந்த ஊழியரை வெளியேற்றினால் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என கூறி கலாட்டா செய்துள்ளார். பின்னர் இயக்குனரின் தலையீட்டிற்கு பிறகு படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது.
Hanshika Motwani
ஏற்கனவே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுடு தண்ணீர் எடுத்து வர தாமதமானதால் உதவியாளரின் கன்னத்தில் அறைந்து பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் முன்னணி நாயகியாக வலம் வரும் ஹன்ஷிகா சினிமா ஊழியரிடம் இப்படி மோசமாக நடந்து கொண்ட செயல் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.