MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Simbu Love story : அடுத்த காதல் அத்தியாயத்தை துவங்கிய STR.. சிம்புவின் முன்னாள் காதலிகள் யார் யார் தெரியுமா?

Simbu Love story : அடுத்த காதல் அத்தியாயத்தை துவங்கிய STR.. சிம்புவின் முன்னாள் காதலிகள் யார் யார் தெரியுமா?

மீண்டும் சிம்புவின் காதல் வாழ்க்கையில் வசந்தம் வீச துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு களத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. 

2 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Jan 07 2022, 03:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
simbu love story

simbu love story

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு உண்மையில் வேற லெவலில் இருந்தவர். டிசிப்ளின்,டெடிக்கேஷன் என தன்னை முழுவதுமாக திரைத்துறைக்கு அர்பணித்திருந்தார் சிறுவயது சிம்பு.  திரையில் நாயகனாக அறிமுகமான சிறுது காலத்திலேயே இயக்குனர் அவதாரம் எடுத்த சிம்பு  மன்மதன்,வல்லவன், வாலிபன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

29
simbu love story

simbu love story

பின்னர் தொடர் வெற்றிகளை ருசித்து வந்த சிம்புவின் முந்தைய படங்கள் பெரிய வெற்றியை பெற்று தரவில்லை. இதற்கிடையே பீப் பாடல் சர்ச்சை, தயாரிப்பளாருடன் பிரச்சனை ஏற்பட்டதால் சிம்பு படத்திற்கு தடா உள்ளிட்ட பல இடையூறுகளை சந்தித்தார் சிம்பு.
 

39
simbu love story

simbu love story

அதோடு சினிமா வாழ்க்கை மட்டுமல்லாது காதல் வாழ்விலும் பல இன்னல்களையும் தோல்விகளையும் சந்தித்தார் சிம்பு. சிம்புவின் வாழ்க்கையில்  தன்னை விட வயது அதிகமானவரை சிம்பு காதலித்துள்ளார். இவரின் முதல் காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது. அரசல் புரசலானதுதான். அதுவும் அத்தனையும் அவரே பரப்பிவிட்டது என்கிறார்கள். பெரிய இடத்து பெண் என்பதால் அந்த காதல் பெரிதாக பேசப்படவில்லை.

49
simbu love story

simbu love story

இந்த காதல் தோல்வியை மையமாக வைத்தே சிம்பு வல்லன் என்னும் படத்தை இயக்கினார். இதில் நயன்தாரா நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார். நயனின் உதடுகளை கடித்தபடி இவர் அடித்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின.

59
simbu love story

simbu love story

அதோடு சிம்புவும் - நயனும் மிக அந்தரங்கமாக இருந்த சில படங்கள் வெளியாகின. இந்த நயன்தாராவுக்கு தெரியாமல் சிம்பு ஆள் வைத்து எடுத்தார்  என சொல்லப்பட்டது. இதன்காரணமாகவே நயன்தாரா சிம்புவை வெறுத்து காதல் ரத்து செய்து கொண்டார் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

69
simbu love story

simbu love story

பின்னர் சில ஆண்டுகளுக்கு முன் ஹன்சிகாவுடன் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஒப்பந்தமானார் சிம்பு. அப்போதே இருவருக்கும் காதல் என செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை ட்வீட்டர் வாயிலாக காதலை அறிவித்தனர். 

79
simbu love story

simbu love story

ஆனால் வெறும் ஆறு மாதங்கள் மட்டுமே இந்த காதல் நீண்டது. காரணம் ஏதும் கூறாமல் இருவரும் காதல் ரத்து செய்து கொண்டனர். ஆனாலும் தற்போது மீண்டும் மகா படத்தில் நடிக்கும்போது சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் இடையில் அந்த பழைய காதல் துளிர்விட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

89
simbu love story

simbu love story

இவ்வாறு தொடர் காதல் தோல்விகளின் காரணமாக மனம் நொந்த சிம்பு கோவில், வழிபாடு என ஆன்மிகம் பக்கம் சாய்ந்து விட்டார். அதோடு பட வாய்ப்பிற்காக 110 கிலோ இடையிலிருந்த சிம்பு படாதபாடுபட்டு தனது பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார். 

99
simbu love story

simbu love story

இந்நிலையில் மீண்டும் சிம்புவின் காதல் வாழ்க்கையில் வசந்தம் வீச துவங்கியுள்ளதாக தெரிகிறது. ஈஸ்வரன் படத்தில் சிம்புவுடன் ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார். அந்த படத்தின் படப்பிடிப்பு களத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. அதோடு சமீபகாலமாக சிம்பு-நிதி அகர்வால் இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
நயன்தாரா
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved