MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் அடித்த ஜாக்பாட்... அஜித் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய ஜிபி முத்து

பிக்பாஸில் இருந்து வெளியேறியதும் அடித்த ஜாக்பாட்... அஜித் பட வாய்ப்பை தட்டித்தூக்கிய ஜிபி முத்து

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய ஜிபி முத்துவுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Nov 09 2022, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

டிக்டாக் மூலம் பிரபலமான ஜிபி முத்து, கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். கடந்த மாதம் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட்ட ஜிபி முத்து, முதல் நபராக வெளியேறியும் அதிர்ச்சி கொடுத்தார்.

24

முதல் இரண்டு வாரத்தில் அந்நிகழ்ச்சியில் டிஆர்பி எகிறியது அதற்கு முக்கிய காரணம் ஜிபி முத்து தான். இதனால் இந்த சீசன் இறுதிவரை ஜிபி முத்து இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தனது மகனின் உடல்நிலை கருதி இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்தார்.

இதையும் படியுங்கள்... வீட்டிலேயே இவ்ளோ பெரிய ‘பார்’ஆ... மஜாவான வாழ்க்கை வாழும் நடிகை ஜனனி - வைரல் போட்டோஸ் இதோ

34

மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து போன கமல்ஹாசன், அவரை வெளியே செல்ல அனுமதித்தார். இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஜிபி முத்துவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் சன்னி லியோன் உடன் இணைந்து நடித்துள்ளார் ஜிபி முத்து. இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

44

இந்நிலையில், ஜிபி முத்துவிற்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அது என்னவென்றால், அவரை அஜித் படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இதனை அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தில் தான் ஜிபி முத்துவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் இதுகுறித்த குட் நியூஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஹாட்ரிக் வெற்றிக்கு பின் குதூகலமாக தொடங்கியது கார்த்தியின் ‘ஜப்பான்’ - வைரலாகும் பூஜை புகைப்படங்கள்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
திரையுலகின் ரியல் ஹீரோ! மறைந்த இயக்குநரின் மகளுக்கு உதவிய யோகி பாபு - குவியும் பாராட்டுக்கள்!
Recommended image2
கென் கருணாஸ் இயக்கிய படத்திற்கு தளபதி பட தலைப்பு! விஜய் மீது கொண்ட பாசத்தால் வைத்த அந்த பெயர் - வைரலாகும் தகவல்!
Recommended image3
திருமணத்திற்குப் பிறகு செம பிஸி! ராஷ்மிகா மந்தனா கையில் வரிசையாக 6 மெகா படங்கள் - 'நேஷனல் கிரஷ்' அதிரடி!"
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved