- Home
- Cinema
- OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
OTT-யில் அக்டோபர் 30ந் தேதி மட்டும் 2 டஜன் படங்கள் & வெப் சீரிஸ் ரிலீஸ்... அதன் ஃபுல் லிஸ்ட் இதோ
October 30 OTT Releases : அக்டோபர் 30ந் தேதி ஓடிடி தளங்களில் இரண்டு டஜன் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன் முழு பட்டியலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

OTT Release Movies and Web Series on October 30
திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இணையாக, ஓடிடி தளங்களிலும் ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜியோஹாட்ஸ்டார், சோனி லிவ் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி தளங்களில் புதிய படங்களும் தொடர்களும் வெளியாக உள்ளதாகப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ‘சிக்மா’, ‘டார்க் ஹெவன்’ உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றுள்ளன. அக்டோபர் 30-ம் தேதி வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள், அவற்றின் வெளியீட்டு தேதி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
அக்டோபர் 30 - ஓடிடி வெளியீடுகள்
சிக்மா (Sigma)
ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாகக் கவனம் பெற்ற ‘சிக்மா’, அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் சந்தீப் கிஷான், ராஜு சுந்தரம், சம்பத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர்: யுகந்தர் (Sub-Inspector: Yugandhar)
காவல்துறை பின்னணியில் உருவாகியுள்ள ‘சப்-இன்ஸ்பெக்டர்: யுகந்தர்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படத்தில் சாய் குமார் ஹீரோவாக நடித்துள்ளார். ராகவேந்திர கட்டாரி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.
டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் (Don't Trouble the Trouble)
‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில் ஹீரோவாக நடித்துள்ளார். தியேட்டரில் பிளாப் ஆன இப்படம் ஓடிடியில் எந்த அளவு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ஒரே நாளில் 2 டஜன் ஓடிடி ரிலீஸ்
அக்கா (AKKA) – வெப் தொடர்
‘அக்கா’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே மற்றும் தன்வி ஆஸ்மி நடிப்பில் உருவாகியுள்ள ‘அக்கா’ வெப் தொடர், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கற்பனையான உலகத்தைப் பின்னணியாகக் கொண்டுள்ளது. அங்கு பல தலைமுறைகளாகத் தங்களது அதிகாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாத்து வரும் பெண்களின் உலகிற்குள் புதிய சவால் உருவாகிறது. பவானி மற்றும் ருத்ரா ஆகியோருக்கு இடையிலான அதிகாரப் போட்டி, விசுவாசம், பழிவாங்குதல் ஆகியவை கதையின் முக்கிய அம்சங்களாக அமைகின்றன.
மீதே மே க்யா ஹை (Meethe Mein Kya Hai)
‘மீதே மே க்யா ஹை’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. தீபாவளி கொண்டாட்டத்திற்காகக் குடும்பத்தினர் ஒன்றுகூடும்போது, மனைவியை இழந்த இளம் நபர் தனது துயரத்திலிருந்து மெல்ல மீண்டு வருகிறார். ஆனால், அவரது சகோதரி திடீரெனத் தனது திருமணம் குறித்த தகவலை வெளியிட, குடும்பத்தில் பல்வேறு குழப்பங்களும் எதிர்பாராத திருப்பங்களும் ஏற்படுகின்றன. குடும்ப உறவுகள், மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் நகைச்சுவை கலந்த உணர்ச்சிகரமான தருணங்களை மையமாகக் கொண்ட திரைப்படம் இது.
கப்பிள் ஆஃப் லைஸ் (Couple of Lies) – வெப் தொடர்
‘கப்பிள் ஆஃப் லைஸ்’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இரு தம்பதிகள் தங்களது வீடுகளைச் சில வாரங்களுக்குப் பரிமாறிக்கொண்டு விடுமுறையைக் கழிக்க முடிவு செய்கின்றனர். ஸ்டாக்ஹோமில் வசிக்கும் ஹெலீன் மற்றும் கார்ல், சிசிலியில் உள்ள வீட்டில் தங்கச் செல்கின்றனர்; அதே நேரத்தில் ஸ்கார்லெட் மற்றும் ஆடம் அவர்களது வீட்டில் குடியேறுகின்றனர். ஆரம்பத்தில் இனிமையாகத் தொடங்கும் இந்த அனுபவம், மறைக்கப்பட்ட ரகசியங்களும் சந்தேகங்களும் வெளிப்படும்போது ஆபத்தானதாக மாறுகிறது. நம்பிக்கை, துரோகம் மற்றும் மனரீதியான விளையாட்டுகளை மையமாகக் கொண்ட உளவியல் த்ரில்லர் தொடர் இது.
ஹவ் டு ருயின் தீபாவளி (How to Ruin Diwali) – வெப் தொடர்
தீபாவளியை மையமாகக் கொண்ட ‘ஹவ் டு ருயின் தீபாவளி’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும். தீபாவளி கொண்டாட்டத்தின் போது மறைத்து வைக்கப்பட்ட நிச்சயதார்த்தம் குடும்பத்தினரிடையே எதிர்பாராத பிரச்சினைகளை உருவாக்குகிறது. பாரம்பரியங்கள், குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையிலான கருத்து வேறுபாடுகள் ஒரே வீட்டில் மோதும்போது, பண்டிகைக் கொண்டாட்டம் குழப்பமாக மாறுகிறது. நகைச்சுவை மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட தொடராக இது உருவாகியுள்ளது.
கொலிஷன் கோர்ஸ் (Collision Course)
‘கொலிஷன் கோர்ஸ்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. மாட்ரிட் நகரில் பொருளாதார நெருக்கடி நிலவும் சூழலில், கொள்ளையர்கள் குழு ஒன்று வங்கிக்குள் நுழைகிறது. ஆரம்பத்தில் சாதாரணக் கொள்ளையாகத் தோன்றும் சம்பவம், எதிர்பாராத நிகழ்வுகளால் ஆபத்தான விளையாட்டாக மாறுகிறது. ஒவ்வொருவரும் தங்களது உண்மையான முகத்தை மறைத்துக்கொள்ள முயற்சிக்க, ஏமாற்றங்கள், அச்சம் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டம் தீவிரமடைகிறது. குற்றம் மற்றும் த்ரில்லர் அம்சங்களைக் கொண்ட திரைப்படம் இது.
தி பர்த்டே கிஃப்ட் (The Birthday Gift)
‘தி பர்த்டே கிஃப்ட்’ திரைப்படமும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. தனது மகன் தியோவின் பிறந்தநாளை மறக்க முடியாத கொண்டாட்டமாக மாற்ற வேண்டும் என்று தாய் மார்லீன் திட்டமிடுகிறார். அதற்காக உறவினர்கள், விருந்தினர்கள் என அனைவரையும் அழைத்து ஏற்பாடுகளைச் செய்கிறார். ஆனால், எதிர்பாராத பரிசு, விருந்தினர்களின் நடவடிக்கைகள் மற்றும் குழந்தை வளர்ப்பு குறித்த மாறுபட்ட கருத்துகள் காரணமாக நிகழ்ச்சி குழப்பத்தில் முடிகிறது. குடும்ப உறவுகள் மற்றும் நகைச்சுவையான சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படம் இது.
ஓடிடியில் இந்த வாரம் என்ன ஸ்பெஷல்?
டார்க் ஹெவன் (Dark Heaven)
தமிழ் ரசிகர்கள் கவனிக்க வேண்டிய படங்களில் ஒன்றாக ‘டார்க் ஹெவன்’ இடம்பெற்றுள்ளது. இப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ, சிம்ப்ளிசவுத் மற்றும் ஆஹா தமிழ் ஆகிய ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. சின்னத்திரை நடிகர் சித்து இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மலைகிராமத்தில் நிகழும் மர்ம மரணங்களும் அதன் பின்னணியில் இருக்கும் மர்ம முடிச்சுகளும் தான் இப்படத்தின் கதை.
டெட்-எண்ட் ஜாப் (Dead-End Job) – வெப் தொடர்
‘டெட்-எண்ட் ஜாப்’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் ஹியோக்-ஜுன் என்ற இளைஞர், அதிக சம்பளம் வழங்குவதாகக் கூறும் மர்மமான வேலைவாய்ப்பு நிறுவனத்தைப் பற்றிய விளம்பரத்தைப் பார்க்கிறார். அங்கு கிடைக்கும் பகுதி நேர வேலை, சாதாரண வேலையைவிடப் பல மடங்கு சம்பளம் தருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வேலையை ஏற்றுக்கொண்ட பிறகு, அவர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பணியும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பயங்கரமான அனுபவமாக மாறுகிறது. மர்மம், திகில் மற்றும் உயிர் பிழைப்பதற்கான போராட்டம் நிறைந்த தொடர் இது.
அபோகலிப்ஸ்இசட்: நியூ வேர்ல்ட் (APOCALYPSE Z: New World)
‘அபோகலிப்ஸ்இசட்: நியூ வேர்ல்ட்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட பின்னணியில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில், கேனரி தீவுகள் ஐரோப்பாவின் கடைசி பாதுகாப்பான புகலிடங்களில் ஒன்றாக மாறியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தப்பித்து உயிர் பிழைக்க முயலும் மனிதர்களின் போராட்டம் கதையின் மையமாக அமைகிறது. முந்தைய பாகத்தில் இடம்பெற்ற லூசியா உள்ளிட்ட கதாபாத்திரங்களின் பயணம் தொடர்ந்து, ஆபத்துகள் நிறைந்த புதிய சூழலில் கதை நகர்கிறது.
இந்த வார ஓடிடி வரவுகள்
லவ் ஆல்வேஸ் (Love Always) – வெப் தொடர்
‘லவ் ஆல்வேஸ்’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ஒரு வயதான தம்பதியினருக்கும் ஒரு இளம் தம்பதியினருக்கும் மாந்திரீகத்தால் கூடு விட்டு கூடு பாய்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதை நகைச்சுவையுடன் கூறியுள்ளது இந்த வெப் தொடர்.
இதர ஓடிடி வெளியீடுகள்
‘அப்செஸ்’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ‘அவறாச்சன் அண்ட் சன்ஸ்’ திரைப்படமும் அக்டோபர் 30-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அப்செஷன்: தி ஒரிஜினல் அன்-கட் வெர்ஷன்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. ‘இம்மார்டல்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. ‘ருத்ரவனம் பி.எஸ்.’ வெப் தொடர் அக்டோபர் 30-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும்.
‘தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ திரைப்படத் தொடரின் மூன்றாவது பாகமான ‘தி ஸ்ட்ரேஞ்சர்ஸ்: சேப்டர் 3’ அக்டோபர் 30-ம் தேதி லயன்ஸ்கேட் பிளே தளத்தில் வெளியாக உள்ளது. ‘பிக் பேபி’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி ஷடர் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. ‘தி ஜென்டில்மேன் தீஃப்’ திரைப்படம் அக்டோபர் 30-ம் தேதி ஹுலு ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.





