- Home
- Cinema
- அமரன் பட சாதனையை கிட்டகூட நெருங்க முடியாத குட் பேட் அக்லி! வசூலில் AKவுக்கே தண்ணிகாட்டிய SK
அமரன் பட சாதனையை கிட்டகூட நெருங்க முடியாத குட் பேட் அக்லி! வசூலில் AKவுக்கே தண்ணிகாட்டிய SK
சிவகார்த்திகேயனின் பிளாக்பஸ்டர் ஹிட் படமான அமரன் திரைப்படத்தின் வசூல் சாதனையை குட் பேட் அக்லி படத்தால் முறியடிக்க முடியவில்லை.

Amaran Beat Good Bad Ugly in Box Office : அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் தான் தற்போது தமிழ்நாட்டில் பரபரப்பாக பேசப்படும் படமாக உள்ளது. விடாமுயற்சி படத்தின் தோல்வியால் துவண்டுபோய் இருந்த அஜித் ரசிகர்களுக்கு பக்கா விருந்தாக குட் பேட் அக்லி திரைப்படம் அமைந்துள்ளது. வழக்கமாக அஜித் படங்களில் ஆங்காங்கே மாஸ் சீன்கள் இருக்கும். ஆனால் குட் பேட் அக்லி படம் முழுவதுமே மாஸ் சீன்களால் நிரம்பி வழிகிறது என்றே சொல்லலாம். அஜித் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக இப்படம் உள்ளது.
Ajith
வசூல் வேட்டையாடிய குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், இதன் வசூல் நிலவரமும் வெளியாகி உள்ளது. அதன்படி விடாமுயற்சி படத்தைவிட அதிகம் வசூலித்துள்ள இப்படம் முதல் நாளே ரூ.40 கோடிக்கு மேல் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் முதல் நாளில் ரூ.21 கோடி வசூலித்து இருந்தது. இதன்மூலம் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுத்த படமாக குட் பேட் அக்லி மாறி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்; ஆனா அஜித் ரியாக்ஷன் என்ன?
Good bad ugly
2ம் நாளிலும் பிக் அப் ஆகும் குட் பேட் அக்லி
குட் பேட் அக்லி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் அப்படத்தின் இரண்டாம் நாளுக்கான முன்பதிவும் விறுவிறுவென நடைபெற்றுள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாம் நாளுக்கான முன்பதிவு மூலம் ரூ.7.1 கோடி வசூலித்துள்ளது. விடாமுயற்சி படத்தோடு ஒப்பிடுகையில் இது அதிகமாக இருந்தாலும், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன் படங்களோடு ஒப்பிடுகையில் குட் பேட் அக்லி திரைப்படம் கம்மியான வசூலையே பெற்றிருக்கிறது.
Amaran
அஜித்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்
அதன்படி இரண்டாம் நாளுக்கான முன்பதிவில் தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் விஜய்யின் கோட் திரைப்படம் முதலிடத்தில் உள்ளது. அப்படம் 2ம் நாளில் அதிகபட்சமாக முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12.93 கோடி வசூலித்து இருந்தது. அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் 9.65 கோடி வசூல் உடன் இரண்டாம் இடத்திலும், ரஜினியின் வேட்டையன் 8.86 கோடி வசூல் உடன் 3ம் இடத்திலும் உள்ளன. இதையடுத்து 4ம் இடத்தில் 7.1 கோடி வசூல் உடன் குட் பேட் அக்லி உள்ளது.
இதையும் படியுங்கள்... லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அழைப்பு; சர்வதேச அங்கீகாரத்தால் செம குஷியில் அமரன் டீம்!