குட் பேட் அக்லியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்; ஆனா அஜித் ரியாக்ஷன் என்ன?
குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்கில் வெளியாக அமோக வரவேற்பை பெற்று வரும் நிலையில், அதற்கு அஜித் ரியாக்ஷன் என்ன என்பதை பார்க்கலாம்.

'Good Bad Ugly' Response: What was Ajith's reaction? Do you know? கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தான். இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இவர், ஒரு பக்கா ஃபேன் பாய் படமாக இதை இயக்கி இருக்கிறார். அஜித்தை அணு அணுவாக ரசித்த ஒருவரால் தான் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என ரசிகர்களே வியந்து பாராட்டும் அளவுக்கு ஒவ்வொரு பிரேமிலும் அஜித்தை அழகாக காட்டி இருக்கிறார்.
Good Bad Ugly Ajith
குட் பேட் அக்லி ரெஸ்பான்ஸ்
குட் பேட் அக்லி படம் ரசிகர்களை கவர்ந்தாலும், அது ஜெனரல் ஆடியன்ஸ் மற்றும் பேமிலி ஆடியன்ஸை கவருமா என்பது கேள்விக் குறி தான். ஏனெனில் படத்தில் கதை என்பது பெரிதாக இல்லை. முழுக்க முழுக்க அஜித்தின் மாஸை மட்டும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் ஆதிக். அஜித் ரசிகர்களுக்கு அது பிடித்திருந்தாலும், ஜெனரல் ஆடியன்ஸுக்கு அது ஓவர்டோஸ் ஆகத் தான் இருக்கும். ஒரு படத்தின் ரிசல்டை தீர்மானிப்பது அதன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தான். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திற்கு முதல் நாள் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... குட் பேட் அக்லி பாக்ஸ் ஆபிஸில் பல்பு வாங்கியதா? பட்டைய கிளப்பியதா? வசூல் நிலவரம் இதோ
Good Bad Ugly Response
குட் பேட் அக்லியின் ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன்
இப்படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், இப்படம் ரெக்கார்ட் பிரேக்கிங் கலெக்ஷன் செய்திருப்பதாக் கூறி இருக்கிறார். இப்படி குட் பேட் அக்லி திரைப்படத்தை ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டும் நிலையில், மறுபுறம் இப்படத்தின் ரிசல்ட் பார்த்து அஜித்தின் ரியாக்ஷன் என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது நடிகர் அஜித் ஸ்பெயின் நாட்டில் கார் ரேஸில் பிசியாக இருக்கிறாராம்.
Ajith Reaction for Good Bad Ugly
அஜித் ரியாக்ஷன் என்ன?
இந்நிலையில், குட் பேட் அக்லி படத்தின் ரிசல்டை பார்த்து அஜித் என்ன சொன்னார் என இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் படத்தின் ரெஸ்பான்ஸ் பார்த்து அஜித் சார் ரொம்ப ஹாப்பியாக இருக்கிறார் என தெரிவித்திருந்தார். குட் பேட் அக்லி படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால் செம குஷியில் இருக்கும் அஜித், தன்னுடைய அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனிடம் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படியுங்கள்... Good Bad Ugly Cast Salary: ரூ.280 கோடி பட்ஜெட்டில் உருவான 'குட் பேட் அக்லி' பட நடிகர்களின் சம்பள விவரம்!