திரைக்கு வந்து ஒரு மணி நேரத்தில் எச்டி பிரிண்டில் ஆன்லைனில் லீக் ஆன கேம் சேஞ்சர்: படக்குழு அதிர்ச்சி!
Game Changer Movie Leaked Online : ராம் சரண் 3 விதமான ரோலில் நடித்த கேம் சேஞ்சர் திரைக்கு வந்து ஒரு மணி நேரத்திலேயே ஆன்லைனில் லீக்காகியுள்ளது.
Director Shankar, Ram Charan, Game Changer
Game Changer Movie Leaked Online : ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு ராம் சரண் நடிப்பில் நேரடியாக திரைக்கு வந்த படம் கேம் சேஞ்சர். பிரம்மாண்ட இயக்குநர் என்று சொல்லப்படும் ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண், அஞ்சலி, கியாரா அத்வானி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஜெயராம், சுனில் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான கேம் சேஞ்சர் படம் இன்று திரைக்கு வந்தது. ரூ.450 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஷங்கர் ரூ.95 கோடி செலவு செய்திருக்கிறார்.
Game Changer Movie, Shankar
முழுக்க முழுக்க அரசியல் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது. நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான ராம் நந்தன் (ராம் சரண்), தனது தந்தை அப்பண்ணாவின் ஊழல் இல்லாத நாடு என்ற கனவை அழித்த முதல்வர் பொப்பிலி மோபிதேவியின் ஊழல் அதிகாரிகாரத்திற்கு எதிராக போராடும் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம் சரண் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
Shankar, Ram Charan, Game Changer Movie
கதை, திரைக்கதை எழுதிய கார்த்திக் சுப்புராஜ், இயக்கம் ஷங்கர். தயாரிப்பு வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜூ. 3 வருட இடைவெளிக்கு பிறகு ராம் சரணுக்கு இந்தப் படம் திரைக்கு வந்தது. அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்த இந்தப் படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று ஏமாற்றத்தை சந்தித்தது.
ஷங்கர் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? கேம் சேஞ்சர் விமர்சனம் இதோ
Ram Charan Game Changer Movie Online Leak
இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியாகி ஒரு மணிநேரத்திற்குள்ளாக இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள வசதியாக ஆன்லைனில் லீக் செய்யப்பட்டுள்ளது. திருட்டு இணையதளங்களை முடக்க பல வருடங்களாக முயற்சித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. இப்போது ஷங்கர் இயக்கும் எல்லா படங்களும் தோல்வியை நோக்கியோ டிராவல் செய்து வருகிறது. இதற்கு முன்னதாகா பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இந்தியன் 2 படம் பெரியளவில் எதிர்மறை விமர்சனத்தை பெற்றது.
விஜய்யின் வாரிசு அட்ட பிளாப்: கேம் சேஞ்சருக்கு காத்திருந்த தில் ராஜூக்கு ஆப்பு வச்ச ஷங்கர்!
GAME CHANGER Leaked Online
இப்போது கேம் சேஞ்சர படம் அதிகளவில் எதிர்மறை விமர்சனத்தை பெற்று தயாரிப்பாளரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. படத்தை பற்றி முதல் நாள் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் பலவிதமாக கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர். இது போன்று அரசியல் கதையை மையப்படுத்தி தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்துவிட்டன. படத்திற்கு இசை பலம் சேர்த்திருந்தாலும், கதைகளும், காட்சிகளும் பெரியளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. இதுவே படத்திற்கு பெரிய மைனஸ் பாய்ண்டாக அமைந்துவிட்டது.
ஷங்கரின் பாலிடிக்ஸ் ஒர்க் அவுட் ஆனதா? கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ