MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய்யின் வாரிசு அட்ட பிளாப்: கேம் சேஞ்சருக்கு காத்திருந்த தில் ராஜூக்கு ஆப்பு வச்ச ஷங்கர்!

விஜய்யின் வாரிசு அட்ட பிளாப்: கேம் சேஞ்சருக்கு காத்திருந்த தில் ராஜூக்கு ஆப்பு வச்ச ஷங்கர்!

Game Changer Disappointed Producer Dil Raju : விஜய் நடித்து வெளியான வாரிசு படம் சரியாக ஓடவில்லை என்று கூறியிருந்த தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு இப்போது கேம் சேஞ்சர் படமும் பெரியளவில் ஆப்பாக வைத்துவிட்டது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 10 2025, 11:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dil Raju, Game Changer Movie

Dil Raju, Game Changer Movie

Game Changer Disappointed Producer Dil Raju : தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரமான தளபதி விஜய் இப்போது தன்னுடைய 69ஆவது படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் விஜய் காம்பினேஷனில் உருவாகும் முதல் படம் இது. இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், பிரியாமணி, நரைன், மோனிஷா பிளெஸ்ஸி, மமிதா பைஜூ, தீஜே அருணாச்சலம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ரூ.300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்தப் படம் வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Game Changer Movie, Dil Raju

Game Changer Movie, Dil Raju

இந்த நிலையில் தான் கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரைக்கு வந்த படம் வாரிசு. இயக்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தில் ராஜூ தயாரிப்பில் தமன் இசையில் உருவான இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து சரத்குமார், பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன், சங்கீதா, விடிவி கணேஷ் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

ஷங்கரின் பாலிடிக்ஸ் ஒர்க் அவுட் ஆனதா? கேம் சேஞ்சர் முழு விமர்சனம் இதோ

36
Dil Raju, Shankar, Game Changer Movie

Dil Raju, Shankar, Game Changer Movie

குடும்ப கதையை மையப்படுத்திய இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.310 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. எனினும் தெலுங்கில் இந்தப் படம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ.27.21 கோடி வரையில் வசூல் குவித்தது. இந்தப் படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் தில் ராஜூ வாரிசு தெலுங்கு சினிமாவில் ஏமாற்றத்தை கொடுத்துவிட்டதாகவும், இதனால், கேம் சேஞ்சர் படத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார்.

46
Samuthirakani, Shankar Game Changer Movie

Samuthirakani, Shankar Game Changer Movie

அதோடு கேம் சேஞ்சர் படம் மூலமாக கம்பேக் கொடுப்போம் என்றும் கூறினார். இந்த நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் 3 வேடங்களில் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்போது திரைக்கு வந்துள்ளது. இன்று வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. ராம் நந்தன் (ராம் சரண்) நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி. தனது சொந்த ஊரான விசாகப்பட்டினத்திற்கு வருகிறார். அவர் நேர்மையாக இருப்பதால் ஊழல்வாதியான அமைச்சர் பாப்பிலி மோப்பிதேவிக்கு (எஸ்ஜே சூர்யா) பிடிக்கவில்லை. இதனால், தனது செயலுக்கு தடையாக இருக்கும் ராம் நந்தனை ஒழிக்க திட்டமிடுகிறார். 

56
Ram Charan, S J Suryah, Kiara Advani

Ram Charan, S J Suryah, Kiara Advani

அதிகாரத்திற்காக தனது தந்தையான ஆந்திர முதல்வர் சத்தியமூர்த்தியையே (ஸ்ரீகாந்த்) கொல்ல துணிகிறார். ஆனால் மகனை நன்கு அறிந்த சத்தியமூர்த்தி, எதிர்பாராத விதமாக ராம் நந்தனை தனது வாரிசாக அறிவிக்கிறார். இது மோப்பிதேவிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதோடு ராம் நந்தன் முதல்வராக வருவதை தடுத்து நிறுத்தி மோப்பிதேவி (எஸ்ஜே சூர்யா) முதல்வராகிறார். 

இதையடுத்து நடக்கும் சம்பவங்கள் தான் படத்தோட கதை. இது போன்று எத்தனையோ கதைகள் தமிழ் சினிமாவில் வந்ததால் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அந்தளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

66
Dil Raju, Shankar, Game Changer Movie

Dil Raju, Shankar, Game Changer Movie

இந்த நிலையில் தான் வாரிசு படத்தை பெரிதாக நம்பி தெலுங்கு வசூலில் ஏமாந்த தயாரிப்பாளர் தில் ராஜூவிற்கு கேம் சேஞ்சர் படமானது ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் வந்த இந்தியன் 2 படம் பெரியளவில் தோல்வியை கொடுத்த நிலையில் இப்போது கேம் சேஞ்சர் படமும் ஏமாற்றம் அளித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Nayanthara Black Dress: வயசானாலும் குறையாத அழகு.. பிளாக் ட்ரெஸ்ஸில் நயன்தாரா கியூட் க்ளிக்ஸ்!
Recommended image2
Keerthy Suresh: 'நான் ட்ரோல்களை கண்டுகொள்ளவே மாட்டேன்' - கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Recommended image3
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved