ஷங்கர் கம்பேக் கொடுத்தாரா? கடுப்பேற்றினாரா? கேம் சேஞ்சர் விமர்சனம் இதோ
Game Changer Review : பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தில் ஹீரோயினாக கியாரா அத்வானியும், வில்லனாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த், சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார். இப்படத்தில் நடிகர் ராம்சரண் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதை கார்த்திக் சுப்புராஜுடையது. அதற்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஷங்கர். இப்படத்தை சுமார் 450 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். குறிப்பாக இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டும் சுமார் 90 கோடிக்கு மேல் செலவழித்து உள்ளனர். கேம் சேஞ்சர் திரைப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகி இருக்கிறது. அப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனத்தை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... விவாகரத்தான அந்த நடிகையை தான் ரொம்ப பிடிக்கும்; ஷாக் கொடுத்த ராம் சரண்!
கேம் சேஞ்சர் வழக்கமான ஒரு அரசியல் டிராமா படம். ராம்சரண், அப்பன்னாவாக சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் கதாபாத்திர வடிவமைப்பு பலமாக இல்லை. தோப் பாடல் சூப்பர், பின்னணி இசை படத்துக்கு கைகொடுத்துள்ளது. இண்டர்வெலுக்கு முந்தைய காட்சியும், பிளாஷ்பேக் காட்சியும் நன்றாக உள்ளது. மற்றபடி மந்தமான திரைக்கதை. சுத்தமாக எமோஷனல் கனெக்ட் இல்லை. மொத்தத்தில் கேம் சேஞ்சர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜின் கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இயக்குனர் ஷங்கர் அதற்கு அமைத்த திரைக்கதை படத்தை பலவீனம் ஆக்கி உள்ளது. ராம்சரண் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு தனித்து நிற்கிறது. இவர்கள் இருவரும் தான் படத்துக்கு முதுகெலும்பாக உள்ளனர். பாடல்கள் வேஸ்ட். காட்சிகள் நன்றாக இருந்தாலும் அதில் லாஜிக் இல்லை. மொத்தத்தில் இது ஒரு ஆவரேஜ் படம் தான் என பதிவிட்டுள்ளார்.
கேம் சேஞ்சர் ஹிட். டோலிவுட்டுக்குள் பிரம்மாண்டமாக எண்ட்ரி கொடுத்துள்ளார் ஷங்கர். படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக நகர்ந்தாலும் இண்டர்வெல்லும் முந்தைய காட்சியில் இருந்து பிக் அப் ஆகிறது. குறிப்பாக பிளாஷ்பேக்கில் வரும் அப்பன்னா கதாபாத்திரம் பழைய ஷங்கரை பார்த்தது போல் உள்ளது. இரண்டாம் பாதியில் உள்ள விறுவிறுப்பான திரைக்கதை நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது. படத்தின் ஒவ்வொரு பாடல்களும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. ராம்சரண் அப்பன்னா கதாபாத்திரம் மூலம் தனித்து நிற்கிறார். தமனின் இசை படத்திற்கு பலம். புரொடக்ஷன் வேல்யூ மிரள வைக்கிறது. இந்த ஆண்டு சங்கராந்தி வின்னராக கேம் சேஞ்சர் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
கேம் சேஞ்சர் கன்பார் ஹிட். படத்தின் டயலாக்குகள் சிறப்பாக உள்ளன. ஜருகண்டி மற்றும் தூப் பாடல்கள் திரையில் பிரம்மாண்டமாக உள்ளன. படத்தில் சிறப்பான தருணங்கள் இருந்தாலும் கதை மற்றும் திரைக்கதை ஓகே ரகம் தான். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு மற்றும் தமனின் இசை தான் படத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என பதிவிட்டிருக்கிறார்.
பிளாஷ்பேக்கில் வரும் ராம்சரணின் அப்பன்னா கேரக்டர் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. படத்தில் எந்தவித டல் மொமண்டும் இல்லை. முதல் பாதியை விட இரண்டாம் பாதி அருமையாக உள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு வேறலெவல். தமனின் இசை மற்றும் பாடல்கள் திரையில் சூப்பராக இருக்கின்றன. பொங்கலுக்கு இந்த படம் தான் பர்ஸ்ட் சாய்ஸ் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... பொங்கல் ரிலீஸ் படங்களின் கதைக்களம் ஒரு பார்வை!