MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நயன்தாரா மட்டுமில்லைங்க... வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த சினிமா நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ

நயன்தாரா மட்டுமில்லைங்க... வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்த சினிமா நட்சத்திரங்களின் லிஸ்ட் இதோ

வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது என்பது கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. அந்த முறையில் குழந்தை பெற்றுக்கொண்ட சினிமா நட்சத்திரங்கள் பற்றி இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Oct 10 2022, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

அமீர்கான்

பாலிவுட் நட்சத்திர ஜோடியான அமீர்கான் - கிரண் ராவ் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தது. இவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆசாத் ராவ் கான் என்கிற மகன் பிறந்தார்.

27

ஷாருக்கான்

இந்தியில் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரி கான், கடந்த 2013-ம் ஆண்டு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். அவர் தான் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம் கான்.

37

சன்னி லியோன்

பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தனர். சன்னி லியோன் - டேனியல் வைபர் தம்பதிக்கு வாடகைத் தாய் மூலம் ஆஷர், நோவா என்கிற இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.

47

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி - தொழிலதிபர் ராஜ் குந்த்ரா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் குழந்தையை தானே பெற்றுக்கொண்ட ஷில்பா ஷெட்டி, இரண்டாவது குழந்தையை வாடகைத் தாய் முறையில் பெற்றுக்கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டு ஷில்பா ஷெட்டிக்கு சமிஷா என்கிற மகள் இந்த முறையில் பிறந்தார்.

இதையும் படியுங்கள்...  வாடகைத் தாய் முறையில் நயன் - விக்கி ஜோடிக்கு இரட்டை குழந்தைகள்! வாடகைத் தாய் என்றால் என்ன? - வாங்க பார்க்கலாம்

57

பிரீத்தி ஜிந்தா

நடிகையும், பஞ்சாப் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தாவும் கடந்த 2021-ம் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்டார்.

67

பிரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா - பாப் பாடகர் நிக் ஜோனாஸ் தம்பதி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மல்டி மேரி என்கிற பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை அவர்கள் வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டனர்.

77

நயன்தாரா

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் கலாச்சாரம் பாலிவுட்டில் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில், தற்போது கோலிவுட்டிலும் அது பரவி உள்ளது. நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இந்த முறை மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... நயனும் - நானும் அம்மா & அப்பா ஆகிட்டோம்..! இரட்டை குழந்தைகள் புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆமிர் கான்
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கேரளத்து பைங்கிளி.. தமிழ் ரசிகர்களின் செல்லக் கிளி! - ரேஷ்மா முரளிதரன் மிரட்டல் பின்னணி!
Recommended image2
OTTயில் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 5 தமிழ் கேங்ஸ்டர் மூவீஸ் இதோ
Recommended image3
ராகவ்வை கதற கதற அடித்த சோழன்... நிலாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved