நயனும் - நானும் அம்மா & அப்பா ஆகிட்டோம்..! இரட்டை குழந்தைகள் புகைப்படத்துடன் குட் நியூஸ் சொன்ன விக்னேஷ் சிவன்!
நடிகை நயன்தாரா விரைவில் குழந்தை பெற்று கொள்ள உள்ளதாக, கூறப்பட்ட நிலையில் தற்போது நயன் - விக்கி இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றுடுத்துள்ளதாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
கடந்த 7 வருடங்களுக்கு மேலாக காதலித்து, ஜூன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்த நயன் - விக்கி இருவரும், தொடர்ந்து தங்களின் திரையுலக பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் நயன் திருமணத்திற்கு பின்னர், தான் நடிக்கும் படங்களில் தாலியை கழட்ட மாட்டேன் என கண்டீஷன் போட்டு நடித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
மேலும் நயன் - விக்கி இருவரும் குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், எனவே நயன் மருத்துவர்களை அணுகிய போது, நயன்தாரா 9 மாதங்கள் மருத்துவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என கூறியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் செய்திகள்: நடிகர் சின்னி ஜெயந்த் மகன் திருப்பூர் மாவட்ட சார் ஆட்சியராக நியமனம்..! குவியும் வாழ்த்து..!
இதற்காக நயன்தாரா தற்போது பாலிவுட் திரையுலகில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வரும் படத்தை தவிர மற்ற படங்களில் கமிட் ஆகாமல் உள்ளதாகவும்... விரைவில் இவர்கள் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், யாரும் சற்றும் எதிர்பாராத நேரத்தில் விக்னேஷ் சிவன் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோரான தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து சில புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன், "நயனும் நானும் அம்மா & அப்பாவாகிவிட்டோம்" நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள், இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. எங்களின் பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து, தற்போது 2 ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தைகளின் வடிவில் வந்துள்ளது. உங்கள் அனைவரின் ஆசிகளும் எங்களுக்காக வேண்டும் என கூறி உயிர் & உலகம் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: இந்து என்பது ராஜராஜ சோழனுக்கு பொருந்தும்..! ஏன்... எப்படி? அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ஜி..!
பாலிவுட் நாயகிகளை போல்... வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோரான நயன் - விக்கி நட்சத்திர ஜோடிக்கு, வாழ்த்துக்கள் ஒரு புறம் குவிந்து வந்தாலும், மறுபக்கம் சர்ச்சையிலும் சிக்கி உள்ளனர். இந்தியாவில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றெடுக்க கடந்த ஜனவரி மாதமே அரசு தடை விதித்த நிலையில், நயன் - விக்கி ஜோடி எப்படி அந்த முறையில் குழந்தை பெற்றெடுத்தது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.