இந்து என்பது ராஜராஜ சோழனுக்கு பொருந்தும்..! ஏன்... எப்படி? அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ஜி..!
ராஜ ராஜ சோழன் காலத்தில் இந்து என்கிற வார்த்தை இல்லை என்றும், பொன்னியின் செல்வனின் அவரை இந்து என குறிப்பிட்டுள்ளதற்கு பலர் தங்களது எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில், இயக்குனர் மோகன் ஜி இந்த சர்ச்சைக்கு தற்போது கொடுத்துள்ள பேட்டி மூலம் தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.
ராஜ ராஜ சோழனுக்கு இந்து என்கிற வார்த்தை பொருந்தும் என கூறி இயக்குனர் மோகன் ஜி தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளதாவது, "தமிழக மக்களுக்கு இதற்கு முன்பு நம் வரலாற்றை பற்றிய ஆர்வம் இருந்ததில்லை. 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திற்கு பின்பு தான் சோழர்கள் பற்றியும், சேரர்கள் பற்றியும், பல்லவர்கள் பற்றியும், பாண்டியர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் வந்துள்ளது. வீராணம் ஏரி பக்கத்தில் இருக்கும் கோவில்களில் கூட பல மக்கள் சென்று பார்த்துக் கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். இது பலருக்கு நிஜமாகவே ஒரு பயத்தை உருவாக்கி உள்ளது.
இதற்கு முன்பு மக்கள் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. அவரவர் தேவைகளுக்காக மட்டுமே ஓடிக்கொண்டிருந்தனர். தற்போது இதைப்பற்றிய ஒரு புரிதல் வந்துள்ளதால் பல விஷயங்களால் பிரிந்திருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்கிற அச்சம் நிலவு இருக்கிறது. 'பொன்னியின் செல்வன்' அதை செய்துள்ளது. எதையும் அவர்கள் பிளான் பண்ணி செய்யவில்லை என்றாலும், தெரிந்தோ தெரியாமலோ... இதை செய்துள்ளதால் பல சர்ச்சைகள் உருவாகி உள்ளது.
இந்து அறநிலைத்துறை என்று பெயர் வைக்க கூடாது. என பலர் கூறி உள்ளனர். அது முழுக்க முழுக்க தமிழக அரசு எடுக்க வேண்டிய முடிவு அதை யாராலும் மாற்ற முடியாது. அதே நேரம் இந்து என்பது இல்லை என சொல்ல முடியாது. என்னுடைய சான்றிதழில் கூட இந்து என்று தான் உள்ளது. இதேபோல் இந்த கருத்தை செல்பவர்கள் சான்றிதழிலும் கூட அப்படிதான் இருக்கும். ராஜராஜ சோழனின் காலத்தில், வெறும் சைவம் வைணவம் மட்டும்தான் இருந்தது என சொல்லிவிட முடியாது. ராஜ ராஜ சோழன் தன்னுடைய நினைவாக விட்டு சென்றுள்ள தஞ்சை கோவிலில் பெரிய மலையின் வடிவம் உள்ளது. அது கைலாய மலையின் வடிவம். இவருக்கு எப்படி? இந்தியாவின் எல்லையில் உள்ள ஒரு கைலாய மலையை பற்றி தெரிந்திருக்க முடியும்.
மேலும் செய்திகள்: இரண்டாவது முறையாக திமுக தலைவராகப் தேர்வு செய்யப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
எனவே அவர்கள் பாரத தேசம் முழுவதும் பயணித்தவர். தெற்காசியத்தையே கட்டி ஆண்டவர். இவர்களை சைவம் - வைணவம் என்று சொல்லிவிட முடியாது. அந்த மலை வடிவத்தில் உள்ள சிற்பத்தை பார்த்தால் கணபதியம் சிலை இருக்கும். அது ஒரு மதம். அதேபோல் கோவரியம் என்கிற சிற்பமும் இருக்கும். அங்கு வாராகி அம்மனுக்கு தனி கோவிலும் உள்ளது அவர் சக்தியின் ரூபம்.
மேலும் ராஜராஜ சோழன் எதனை பெருமாள் கோயில்களுக்கு நிதி வழங்கியுள்ளார், கொடை வழங்கியுள்ளார் என்பது கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது. அவரை ஒரு மதம் என்று சுருக்கி பார்க்க முடியாது. நான் இங்கு பதிவு செய்துள்ள அத்தனை மதங்களும் இந்து நெறி என்று கூறலாம். அப்படிதான் அவரை பார்க்கவும் வேண்டும். வெறும் சைவம் - வைணவம் என்று சொன்னால் எந்த கல்வெட்டில் அவர் தன்னை சைவம், வைணவம் என கூறியுள்ளார் என்கிற தெளிவான விளக்கத்தையும் கொடுக்க வேண்டும். இந்து இல்லை என சொல்லிவிட்டு போய்விட முடியாது.
மேலும் செய்திகள்: விஜய் டிவி சீரியல் நடிகர் ஆர்ணவ் மீது அதிரடி வழக்கு பதிவு..! பூதாகாரமாக வெடிக்கும் திவ்யா ஸ்ரீதர் கொடுத்த புகா
சங்ககாலத்திலேயே இந்து என்ற பெயர் உள்ளது. அதற்கான ஆதாரங்களும் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்துஸ்தான் என்கிற பெயரை நாம் உபயோகித்துள்ளோம். சிந்து சமவெளி நாகரிகம் என்று எடுத்துக் கொண்டாலும், அதுவும் வட இந்தியாவில் இருந்து வந்தது தான். இந்து என்கிற வார்த்தை ராஜராஜ சோழனுக்கு பொருந்தும் அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடம் ஒற்றுமை உருவாகிவிட கூடாது என சிலர் நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் மோகன் ஜி. இவரது இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.