குடும்பமே டார்ச்சர் செய்தது! செல்வராகவனை விவாகரத்து செய்ய இது தான் காரணம்! உண்மையை உடைத்த சோனியா அகர்வால்!
நடிகை சோனியா அகர்வால், இயக்குனர் செல்வராகவனை விவாகரத்து செய்ததன் காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு, தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகையும் - மாடலுமான சோனியா அகர்வால். இதைத் தொடர்ந்து, கன்னடம் , தமிழ், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளின் நடித்து மிகவும் பிரபலமானார்.
சோனியா அகர்வாலை தமிழில், 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் செல்வராகவன். இந்த படத்தில் நடிக்கும் போது சோனியா அகர்வாலுக்கும் - செல்வராகவனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. எனினும் இருவரும் தங்களுடைய காதலை வெளிப்படுத்தாமல் கேரியரில் கவனம் செலுத்தினர்.
சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான கோவில், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, வானம், ஒரு நாள் ஒரு கனவு, போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
செல்வராகவனின் அடுத்தடுத்த படங்களில் சோனியா அகர்வால் நடித்து வந்ததால், இவர்களின் காதல் கிசுகிசு கோலிவுட் திரையுலகில் அதிகம் பேசும் பொருளாக மாறிய நிலையில், முன்னணி நடிகையாக இருக்கும் போதே இயக்குனர் செல்வராகவனை பெற்றோர் சம்மதத்துடன், கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால்.
திருமணத்திற்கு பின்னர் இவர்களுடைய வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த போதும், திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த சில வருடங்களிலேயே இயக்குனர் செல்வராகவன் தன்னுடன் துணை இயக்குனராக பணியாற்றிய, கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். ஆனால் சோனியா அகர்வால் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தற்போது வரை தன்னுடைய இரண்டாவது திருமணம் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சோனியா - அகர்வால் செல்வராகவனுக்கு விவாகரத்தான போது, இவர்களை குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அதிலும் குறிப்பாக நடிகை சோனியா அகர்வாலுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், திருமணத்திற்கு பின்னர் பலமுறை கண்டித்தும் சோனியா அகர்வால் எந்த நேரமும் மது போதையில் இருந்ததால், இவருடன் குடும்பம் நடத்த முடியாது என முடிவு செய்து அவரை செல்வராகவன் விவாகரத்து செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இது குறித்தும் சோனியா அகர்வால் ஒரு முறை கூட மறுப்பு தெரிவிக்க வில்லை. மாறாக தன்னுடைய பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், இவர்களுக்கு விவாகரத்து ஆகி 10 வருடங்களுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது சோனியா அகர்வால், முதல் முறையாக விவாகரத்து பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?
திருமணத்திற்கு பின்னர் சோனியா அகர்வாலை செல்வராகவனின் ஒட்டுமொத்த குடும்பமும் நடிக்க கூடாது என எதிர்த்ததாகவும், எனவே ஒரு வருடம் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்த சோனியா அகர்வால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் நடிகை குஷ்பு மூலம் சீரியல் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், மன உளைச்சலில் இருந்து மீள்வதற்காக குடும்பத்தினரின் எதிர்ப்புகளை மீறி அந்த சீரியலில் நடித்ததால், விவாகரத்து செய்ய சொல்லி தன்னை செல்வராகவனின் குடும்பத்தினர் டார்ச்சர் செய்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் சோனியா அகர்வால்.