Biggboss 7: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் எதிர்பாராத ட்விஸ்ட்! புதிய புரோமோவில் சஸ்பென்ஸை உடைத்த கமல்ஹாசன்!

'பிக்பாஸ்' சீசன் 7 நிகழ்ச்சி குறித்த இரண்டாவது ப்ரோமோவை தற்போது விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
 

this time biggboss season 7 will start with two houses latest update

விஜய் டிவியில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஆறு சீசன்களை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், பிரபல சீரியல் நடிகர் அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பிரபல அரசியல் பிரபலமான விக்ரமன் கைப்பற்றினார்.

இதை தொடர்ந்து கடந்த இரண்டு மாதமாகவே பிக்பாஸ் சீசன் 7 துவங்க உள்ளது பற்றிய அறிவிப்புகள் அவ்வபோது வெளியாகி வருகிறது. மேலும் இந்த முறை, பலரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என கூறப்பட்டது.

this time biggboss season 7 will start with two houses latest update

நடிகை விஜயலட்சுமி வீட்டு வரலட்சுமி நோம்பு எப்படி இருக்குனு பாருங்க..! வைரலாகும் போட்டோஸ்..!

அதன்படி ஏற்கனவே, இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் என சில தகவல்கள் வெளியான நிலையில்... இதனை தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ உறுதி செய்துள்ளது.  டபுள் ஆக்ஷனில் நடிகர் கமலஹாசன் தோன்றியுள்ள புதிய ப்ரோமோவை சற்று முன்னர் விஜய் டிவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.  இந்த முறை 100 நாட்கள், 20 போட்டியாளர்கள், 60 கேமராக்கள், போன்ற விஷயங்கள் பழசாக இருந்தாலும், பிக்பாஸ் வீடு இரண்டாக மாறி உள்ளதாக கமலஹாசன் அறிவிக்கிறார்.

this time biggboss season 7 will start with two houses latest update

தேசிய விருது ஊக்கம் கொடுத்துள்ளது..! கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

மேலும் சும்மாவே வீடு ரெண்டாகும்,  இப்போ வீடே இரண்டாயிடுச்சுன்னா இன்னும் என்னென்ன நடக்கும் என்கிற புதிரோடு கமலஹாசன் இந்த ப்ரோமோவில் பேசியுள்ளார். 'பிக்பாஸ்' நிகழ்ச்சி அக்டோபர் மாதம் 8ஆம் தேதி துவங்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் டிவி தரப்பிடம் இருந்து வெளியாகவில்லை என்றாலும், விரைவில் இந்த அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது.

this time biggboss season 7 will start with two houses latest update

2023 உலக கோப்பையை அறிமுகம் செய்த முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்ற மீனா! குவியும் வாழ்த்து!

பிக்பாஸ் வீடே இரண்டு ஆச்சுன்னா கண்டிப்பா இதில் நடத்தப்படும் போட்டிகளும் மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதை போல் பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதம் தூங்குவதால், இந்த முறை நூறு நாட்கள் வரை தாக்கு பிடிக்கும் பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள்யேதான் தீபாவளி, நியூ இயர், பொங்கல், போன்ற பண்டிகைகளை கொண்டாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios