தேசிய விருது ஊக்கம் கொடுத்துள்ளது..! கடைசி விவசாயி பட இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சி..!

69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதில் தமிழி இரண்டு தேசிய விருதுகளை பெற்ற, 'கடைசி விவசாயி' படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன் நெகிழ்ச்சியுடன் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

Kadaisi Vivasayi director manikandan thanking note for national award

69-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த 2021-ம் ஆண்டு சென்சார் செய்யப்பட்ட படங்களில் இருந்து சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து அதற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இதில் முதலில் ஸ்பெஷல் ஜூரி விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதில் கடைசி விவசாயி படத்தில் நடித்த 83 வயது முதியவர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதையும் கடைசி விவசாயி வென்றுள்ளது.

இப்படி இரண்டு விருதுகளை பெற்ற, 'கடைசி விவசாயி' படத்தை இயக்கிய இயக்குனர் மணிகண்டன்.. தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கடிதம் ஒன்றை வெளியிட்டுளளார்.

Kadaisi Vivasayi director manikandan thanking note for national award

மயூ தான் முக்கியம்..! இனியா ஆசையில் மண்ணை போட்டு அழ வைக்க போகும் கோபி! 'பாக்கிய லட்சுமி' சீரியல் அப்டேட்!

இதில் கூறி இருபதாவது,  அனைவருக்கும் அன்பான வணக்கம்.... "மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட 'கடைசி விவசாயி' திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான  “கடைசி விவசாயி”  படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும்  இந்நேரத்தில்  என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து,  கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை  உலகம் முழுதும் கொண்டு சேர்த்த  விஜய்சேதுபதி தயாரிப்பு மற்றும் 7cs Entertaiments  நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன்.விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

Kadaisi Vivasayi director manikandan thanking note for national award

அடிச்சி தூக்கு.. வசூலில் வரலாற்று சாதனை படைத்த தலைவரின் ஜெயிலர்! அதிகார பூர்வமாக அறிவித்த சன் பிச்சர்ஸ்!

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய  மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios