MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?

ஜனனி - ஜீவானந்தத்துடன் கை கோர்த்து மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த அப்பத்தா! அடுத்து நடக்க போவது என்ன?

ஒரு பக்கம் அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை அடைய குணசேகரன் படாத பாடுபட்டு வரும் நிலையில், தற்போது அப்பத்தா கோமாவில் இருந்து குணமடைந்து, மீண்டும் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இது குறித்த புரோமோ தான் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 25 2023, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு என மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எப்படியும் அப்பத்தாவின் 40 சதவீத சொத்துக்களை அவரிடம் இருந்து வாங்கி விட வேண்டும் என குணசேகரன் கணக்கு போட்ட நிலையில், அப்பத்தாவோ புத்திசாலித்தனமாக காய் நகர்த்தி தன்னுடைய 40 சதவீத சொத்துக்களையும் ஜீவானந்தத்தின் பெயருக்கு செல்வது போல் செய்துவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

எனவே ஜீவானந்தத்தின் மீது குணசேகரன் மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தின் கோபமும் சென்றது. ஜீவானந்தம் அப்பத்தாவை ஏமாற்றி தான் இந்த சொத்துக்களை அடைந்தார் என அனைவருமே எண்ணிய நிலையில், சமீபத்தில் தான் ஜனனிக்கு ஜீவானந்தம் கெட்டவர் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சொத்து பிரச்சனையால் தற்போது, தன்னுடைய மனைவியையும் ஜீவானந்தம் இழந்து விட்டு நிற்பதால், இனி வரும் எபிசோடுகளில் ஜனனி ஜீவானந்தத்திற்கு துணையாக நிற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கமல்ஹாசனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க!

34

மேலும் அப்பத்தா தற்போது கோமாவில் இருந்து கண் முழுத்து விட்டதால், அவரிடம் இருந்து எப்படியும் மிரட்டி உருட்டி... கையெழுத்து வாங்கி, அதை வைத்து ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை மீட்டு விடலாம் என குணசேகரன் கணக்கு போட்டார். ஆனால் அதுவும் தற்போது தப்புக்கணக்காகிவிட்டது. குணசேகரனால் வீட்டிற்குள் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட அப்பத்தா எப்படியோ வீட்டில் இருந்து வெளியேறி நீதிபதியை சந்திப்பது குறித்த காட்சிகள் தான் இன்றைய புரோமோவில் இடம் பெற்றுள்ளது.

44

ஜீவானந்தம் நீதிபதியை வந்து சந்திக்கும் போது, ஜனனியும் கூட இருக்கிறார். அப்போது அப்பத்தா நீதிபதி இடம் ஜீவானந்தம் ரொம்ப நல்லவர் என்று கூறுகிறார்.  குணசேகரன் அந்த இடத்திற்கு வந்து அப்பத்தாவை பார்த்து, "என்ன பழிவாங்குகிறாயா? நான் அழிஞ்சாலும் அழிவேன்... அதுக்கு முன்னாடி உங்க எல்லாரையும் அழிச்சிட்டு தான் அழிவேன் என ஆவேசமாக பேசுகிறார்".  அதைக் கேட்டு அப்பத்தா நிறுத்து குணசேகரா என்று ஒரே வார்த்தையில் பதிலடி கொடுக்க குணசேகரன் அவர் அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார். எனவே இனி குணசேகரனுக்கு எதிரான அப்பத்தாவின் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TRP ரேட்டிங்கில் தாறுமாறு சாதனை செய்த கயல் சீரியல்..! கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்..!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved