இன்று 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் கமல்ஹாசனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகிடாதீங்க!
இன்று தமிழ் சினிமாவில் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் உலக நாயகன் கமல்ஹாசனின் முதல் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில், தன்னுடைய 5 வயதிலேயே 1960 ஆம் ஆண்டு, 'களத்தூர் கண்ணம்மா' என்கிற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்கிற பழமொழிக்கு ஏற்ப, தான் நடித்த முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார்.
இதை தொடர்ந்து, அடுத்தடுத்து பல தென்னிந்திய மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கமல் ஹாசனுக்கு, எடுத்ததுமே கதாநாயகன் வாய்ப்பு கிடைத்து விட வில்லை. டான்ஸ் கலைஞர், சப்போர்டிங் ஆர்ட்டிஸ்ட் என மெல்ல மெல்ல தான், தன்னுடைய திறமையை நிரூபித்து கதாநாயகன் வாய்ப்பை கைப்பற்றினார்.
அந்த வகையில் கமல்ஹாசன் 1973ஆம் ஆண்டு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான அரங்கேற்றம் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் கமல் ஒரு சப்போர்டிங் ஆர்டிஸ்ட்டாக தான் நடித்தார். ஆனால் முதல் படத்திலேயே பாலச்சந்தரை தன்னுடைய நடிப்பால் கவர்ந்த கமல்ஹாசனை பாராட்டி, தயாரிப்பாளரிடம் இருந்து முதல் படத்திற்கான சம்பளமாக 500 ரூபாய் வாங்கி கொடுத்தாராம்.
இதனால் சற்று விரக்தியுடன், என்ன வெறும் 500 ரூபாய் தான் எனக்கு சம்பளமா என கமல் பாலச்சந்தரிடம் கேட்டதாகவும்... அதற்க்கு பாலச்சந்தர். இது தான் உன் ஆரம்பம். உனக்கு இருக்கும் திறமைக்கு, நீ பல ஆயிரங்களிலும், லச்சத்திலும், கோடியிலும் சம்பாதிப்பாய் என கூறியுள்ளார். அவர் கூறிய வார்த்தையும் பலித்து இன்று சுமார் 130 கோடி வரை சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார் கமல்ஹாசன்.