MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஹீரோயினாக ஜொலித்தாரா ஷங்கர் மகள்?... விருமன் நாயகி அதிதி நடிப்பை பார்த்து எல்லாரும் சொல்லும் ‘அந்த’ ஒரு விஷயம்

ஹீரோயினாக ஜொலித்தாரா ஷங்கர் மகள்?... விருமன் நாயகி அதிதி நடிப்பை பார்த்து எல்லாரும் சொல்லும் ‘அந்த’ ஒரு விஷயம்

Viruman Heroine Aditi Shankar : தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர், இவரின் மகள் அதிதி ஹீரோயினாக நடித்துள்ள விருமன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 12 2022, 11:24 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சினிமா பிரபலங்களின் மகனோ அல்லது மகளோ, சினிமாவில் அறிமுகமானால் அதிகளவில் எதிர்பார்ப்பு இருக்கும். அத்தகைய எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமாவில் புது வரவாக காலடி எடுத்து வைத்திருப்பவர் அதிதி ஷங்கர். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் டாக்டர் படிப்பை முடித்தவுடன் சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் நடிக்க வந்துவிட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவர் சினிமாவில் நடிக்க உள்ள செய்தி அறிந்ததும், ஷங்கர் மகள் ஹீரோயினா என பலரும் ஆச்சர்யப்பட்டனர். அதுவும் இவர் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதும், அதிதி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. அதுவும் முதல் படத்திலேயே கிராமத்து நாயகியாக நடித்துள்ளார் அதிதி.

35

விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக மட்டுமின்றி பாடகியாகவும் அறிமுகமாகி உள்ளார் அதிதி. இப்படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை இசையமைப்பாளர் யுவனுடன் சேர்ந்து பாடி அசத்தினார் அதிதி. இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனது. இப்பாடலை முதலில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி தான் பாடி இருந்தார். இறுதியில் யுவன் அதிதியை பாட வைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... கார்த்தியின் கிராமத்து செண்டிமெண்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - ‘விருமன்’ டுவிட்டர் விமர்சனம் இதோ

45

இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் அதிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக சர்ச்சைகளும் எழுந்தன. இதற்கெல்லாம் மத்தியில் தற்போது விருமன் படம் ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. படம் பார்த்தவர்கள் பெரும்பாலானோர் சொல்லும் ஒரே விஷயம் அதிதியை படத்தில் பார்க்கும் போது முதல் படத்தில் நடித்தது போல் தெரியவில்லை, சிறப்பாக நடித்துள்ளார் என்பது தான்.

55

சிலரோ ஷங்கர் மகள் இப்படி சூப்பரா நடிப்பாங்கனு எதிர்பார்க்கல என அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மகளின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருவதனால் இயக்குனர் ஷங்கரும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம். விருமன் படத்துக்கு அடுத்ததாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் அதிதி. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Viruman FDFS : கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் அப்செட் ஆன ஃபேன்ஸ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Trisha : காதல் எப்போதும்... விஜய் முதல்வர் ஆன பின் த்ரிஷா போட்ட சூசக பதிவு - வைரலாக்கும் நெட்டிசன்கள்
Recommended image2
Karuppu முதல் Exam வரை... இந்த வாரம் தியேட்டர் & OTT-ல் செம மாஸாக ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
Recommended image3
Siragadikka Aasai : முத்து மீனாவின் தில்லாலங்கடி வேலை... வாய்கூசாமல் பொய் சொன்ன விஜயா..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved