Viruman FDFS : கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் அப்செட் ஆன ஃபேன்ஸ்
Viruman FDFS : முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், சூரி, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி இருக்கும் விருமன் படத்தால் ரசிகர்கள் கடும் அப்செட் ஆகி உள்ளனர்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு சுல்தான் படம் ரிலீசானது. அதன்பின் ஒன்றரை ஆண்டு இடைவெளிக்கு பின் அவர் நடிப்பில் வெளியாகி உள்ள படம் விருமன். முத்தையா இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி கிராமத்து நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் வெற்றிக்கு பின் முத்தையாவும், கார்த்தியும் இணைந்துள்ள படம் என்பதால் விருமனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
விருமன் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இப்படத்தில் கார்த்தியுடன் சிங்கம்புலி, இளவரசு, வடிவுக்கரசி, பிரகாஷ்ராஜ், சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆர்.கே.சுரேஷ், இந்திரஜா ரோபோஷங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
விருமன் திரைப்படம், இன்று உலகமெங்கும் ரிலீசாகி உள்ளது. பொதுவாக முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசானால் அதிகாலை 4 மணி ஷோக்கள் திரையிடப்படுவது வழக்கம். ஆனால் விருமன் படத்துக்கு அதிகாலை 4 மணி ஷோ திரையிடப்படாதது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இதையும் படியுங்கள்... உலகை பற்றி கவலையில்லை..இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீராவின் போல்ட் போஸ்..
விருமன் படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிட அனுமதி கிடைக்காததால், பெரும்பாலான இடங்களில் 6 மணிக்கு மேல் தான் முதல் காட்சி திரையிடப்பட்டன. சில இடங்களில் ரசிகர்கள் அதிகாலையில் படம் எப்படியாவது ரிலீஸ் ஆகிவிடும் என ஆவலோடு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நிகழ்வுகளும் அரங்கேறின.
விருமன் படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்படாததால் ஏராளமான ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர். சமீபத்தில் சரவணன் அருள் ஹீரோவாக அறிமுகமான தி லெஜண்ட் படத்துக்கே அதிகாலை 4 மணி காட்சி திரையிடப்பட்டபோதும், கார்த்தி போன்ற முன்னணி நடிகர் நடித்த விருமன் படத்துக்கு 4 மணி காட்சி திரையிடப்படாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கட்டப்பாவாக மாறிய காஜல்... பாகுபலியாக மாறி அவரது குட்டி மகன்... ராஜமௌலிக்கு டெடிகேட் செய்த வேற லெவல் போட்டோ..!