கார்த்தியின் கிராமத்து செண்டிமெண்ட் மீண்டும் ஒர்க் அவுட் ஆனதா? இல்லையா? - ‘விருமன்’ டுவிட்டர் விமர்சனம் இதோ
viruman review : முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி நடிப்பில் வெளியாகி இருக்கும் விருமன் படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் காணலாம்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் விருமன். இப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். இயக்குனர் ஷங்கரின் மகளான இவர் இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கொம்பன், மருது, தேவராட்டம் என கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதற்கு பெயர்போன இயக்குனரான முத்தையா விருமன் படத்தையும் அதே பாணியில் இயக்கி உள்ளார். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் 475 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Viruman FDFS : கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் அப்செட் ஆன ஃபேன்ஸ்
அதன்படி நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளதாவது : “விருமன் படம் வெறித்தனமாக இருக்கிறது. கார்த்தியின் நடிப்பு மாஸ். அதிதி ஷங்கர் செம்ம, எக்ஸ்பிரசன்ஸ் அருமையா இருக்கு, சிறப்பான அறிமுகம். அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர். பக்கா பேமிலி எண்டர்டெயின்மெண்ட் பிளாக்பஸ்டர் திரைப்படத்தை கொடுத்துள்ளார் முத்தையா” என பதிவிட்டுள்ளார்.
மற்றொரு நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில், விருமன் படத்தில் கார்த்தியின் நடிப்பு, யுவனின் இசை, ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள், நடிகர்கள் தேர்வு ஆகியவை பாசிடிவாக உள்ளதாகவும், கதை, திரைக்கதை மற்றும் அதை எழுதிய விதம் சொதப்பலாக உள்ளதாகவும் குறிப்பிட்டு இப்படத்துக்கு 5க்கு 3 மதிப்பெண்கள் கொடுத்துள்ளார்.
மதுரையை சேர்ந்த ஒருவர் போட்டுள்ள பதிவில், படம் தரமாக இருப்பதாகவும், கார்த்தி மற்றும் முத்தையா கூட்டணி சூப்பர் என்றும் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் விருமன் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
விருமன் பார்த்த நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள பதிவில், படம் போர் அடிப்பதாகவும், இதற்கு கொம்பன் படமே மேல் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும் முத்தையா இப்படத்தை வேற ஹீரோவை வச்சு எடுத்திருந்தா சூப்பரா இருந்திருக்கும் எனவும், அதிதியின் நடிப்பு சுமார், மாவீரன் எப்படி வரப்போகுதோ என குறிப்பிட்டுள்ளார். கார்த்தியின் நடிப்பு சூப்பராக இருந்தாலும் படம் ஆவரேஜ் தான் என பதிவிட்டுள்ளார்.
விருமன் படம் குறித்து டுவிட்டரில் நெட்டிசன் ஒருவர் போட்டுள்ள டுவிட்டில், “வழக்கமான கதையுடன் தான் முத்தையா இந்த படத்தையும் எடுத்துள்ளார். வழக்கமா கொஞ்சம் பரபரப்பா இருக்குறவர் இந்த தடவ கொஞ்சம் பொறுமைய கைல எடுத்திருக்காப்ல... புதுசா ஒன்னும் இல்ல. கார்த்தியின் நடிப்பு சிறப்பு மற்றும் படத்தில் ஒளிப்பதிவு, இசை ஆகியவை சூப்பர். பி மற்றும் சி செண்டர்களில் படம் தப்பிச்சிரும் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது இப்படம் சற்று கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இருப்பினும் இப்படம் பேமிலி ஆடியன்சுக்கு மிகவும் பிடிக்கும் என ஏராளமானோர் குறிப்பிட்டு வருவதால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினரோடு ‘விருமன்’ பர்ஸ்ட் ஷோ பார்க்க வந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா