இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினரோடு ‘விருமன்’ பர்ஸ்ட் ஷோ பார்க்க வந்த நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா

Sangeetha Vijay : விருமன் படத்தின் முதல் ஷோ பார்க்க இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திரையரங்குக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

Actor vijay Wife Sangeetha watched Viruman Movie FDFS with Director Shankar family

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் முதல் காட்சி பெரும்பாலான இடங்களில் காலை 6 மணிக்கு மேல் தான் திரையிடப்பட்டன. ஒன்றரை ஆண்டுக்கு பின்னர் கார்த்தியின் படம் திரையரங்குகளில் ரிலீஸாவதால், ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.

இப்படத்திற்கு மதுரையில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், மதுரையை சேர்ந்த கார்த்தி ரசிகர்கள், பைக்கில் ஊர்வலமாக வந்து அதகளப்படுத்தி உள்ளனர். கார்த்தியின் விருமன் பட பேனரை கையில் ஏந்தியபடி அவர்கள் பைக்கில் வலம்வந்த காட்சிகள் படு வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Viruman FDFS : கார்த்தியின் விருமன் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிடப்படாததால் அப்செட் ஆன ஃபேன்ஸ்

Actor vijay Wife Sangeetha watched Viruman Movie FDFS with Director Shankar family

விருமன் படத்தை பார்க்க பிரபலங்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விருமன் படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்துள்ளதால், அவரது குடும்பத்தினர் அனைவரும் இன்று திரையரங்கிற்கு வந்துள்ளனர். அவர்களுடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் வருகை தந்திருந்தார்.

விருமன் படத்தின் முதல் ஷோ பார்க்க இயக்குனர் ஷங்கரின் குடும்பத்தினருடன் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவும் திரையரங்குக்கு வந்த போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் விஜய் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்தில் நடித்திருந்தார், அப்படத்திற்கு பின்னர் இருவரது குடும்பத்தினரும் நெருங்கி பழகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒன்றல்ல... இரண்டல்ல... ரஜினியின் ஜெயிலர் படத்தில் மொத்தம் 4 ஹீரோயின்களாம்? - யார்... யார்... தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios