- Home
- Cinema
- கோலிவுட்டில் தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் மாரி செல்வராஜ்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
கோலிவுட்டில் தொட்டதெல்லாம் ஹிட் கொடுக்கும் மாரி செல்வராஜ்; இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா?
தமிழில் பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இன்று தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

Discover the birthday of acclaimed Tamil film director Mari Selvaraj and his Networth : பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் மாரி செல்வராஜ். இப்படத்தை இயக்கும் முன் இயக்குனர் ராமிடம் தங்கமீன்கள், கற்றது தமிழ் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன்மூலம் கிடைத்தை அனுபவத்தை வைத்து அவர் இயக்கிய படம் தான் பரியேறும் பெருமாள். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் ஜாதியை ஒடுக்குமுறையை வெளிச்சம் போட்டு காட்டியது.
Director Mari Selvaraj
முதல் படத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரையில் கொண்டு வந்து வெற்றிவாகை சூடினார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் என்கிற படத்தை இயக்கினார். இதில் அரசியலில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், அதில் உள்ள சாதிய பாகுபாடுகள் பற்றியும் அழுத்தமாக கூறி இருந்தார்.
இதையும் படியுங்கள்... Rajinikanth : மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் - காரணம் என்ன?
Mari Selvaraj Birthday
இதுவரை தமிழ் சினிமா ஒரு காமெடியனாக மட்டும் பார்த்து வந்த வடிவேலுவை சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து கலங்க வைத்தார் மாரி செல்வராஜ். மாமன்னன் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த மாரி, தன் மனைவி திவ்யா உடன் சேர்ந்து வாழை என்கிற படத்தை தயாரித்தார். அப்படத்தை அவரே இயக்கியும் இருந்தார். இது மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தன் மனதில் நீண்ட நாட்களாக இருந்த வலி நிறைந்த கதையை திரையில் காட்டு கல்லு மனசுக்காரர்களையும் கதறி அழ வைத்தது இந்த வாழை. உதாரணத்திற்கு இயக்குனர் பாலாவே இப்படத்தை பார்த்து கண்ணீர் விட்டார்.
Mari Selvaraj Salary
இப்படி மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய நான்கு படங்களுமே வேறலெவல் ஹிட் அடித்தன. அடுத்ததாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்கிற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து தனுஷ் உடன் ஒரு படம், கார்த்தி உடன் ஒரு படம் என மாரி செல்வராஜின் லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. இவர் ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.
Mari Selvaraj Net Worth
இயக்குனர் மாரி செல்வராஜ் திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளன. மாரி செல்வராஜுக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் தான் சொந்த ஊர். அங்கு அவருக்கு சொந்த வீடு இருக்கிறது. இதுதவிர சென்னையிலும் ஒரு வீடு வாங்கி வசித்து வருகிறார். இவரிடம் மினி கூப்பர் காரும் உள்ளது. இவரது சொத்து மதிப்பு ரூ.30 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! கதைக்களம் குறித்து வெளியான தகவல்!