MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மலையாள மாஸ் ஹீரோ... தமிழ்நாட்டில் பேமஸ் ஆனது எப்படி? பகத் பாசில் நடித்த தரமான தமிழ் படங்கள் - ஒரு பார்வை

மலையாள மாஸ் ஹீரோ... தமிழ்நாட்டில் பேமஸ் ஆனது எப்படி? பகத் பாசில் நடித்த தரமான தமிழ் படங்கள் - ஒரு பார்வை

மலையாள நடிகர் பகத் பாசில் இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் நிலையில், அவர் தமிழில் நடித்து ஹிட் ஆன மாஸ் படங்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 08 2023, 10:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இன்று இந்திய திரையுலகமே திரும்பி பார்க்கும் ஒரு நடிகராக இருக்கிறார் பகத் பாசில். இவரின் திரைப்பயணம் காதலுக்கு மரியாதை என்கிற ஹிட் படத்தை கொடுத்த அவரது தந்தை பாசில் இயக்கிய கையேதும் தூரத்து என்கிற பிளாப் படம் மூலம் தொடங்கியது. முதல் படமே தோல்வியடைந்ததால், இனி நடிக்க வேண்டுமா என பகத் என்னும் அளவுக்கு அவரை விமர்சனங்கள் தாக்கின. அப்போது நடிப்பில் இருந்து விலகி வெளிநாட்டுக்கு படிக்க சென்றுவிட்டார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

பின்னர் 7 வருடங்கள் கழித்து திரையுலகில் மீண்டும் காலடி எடுத்த வைத்த பகத், இம்முறை கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்காமல், கிடைக்கும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரு கை பார்த்துவிடலாம் என களத்தில் இறங்கினார். பகத்தின் நடிப்பை ஆரம்பத்தில் விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் அவர் ஒரு தவிர்க்க முடியாத நடிகர் என சொல்லும் அளவுக்கு தன் நடிப்பால் விமர்சகர்களை பிரம்மிக்க வைத்தால் பகத்.

37

காதல், நகைச்சுவை, டிராமா, கேங்ஸ்டர், வில்லன் என எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் பகத், அதை கண்களிலேயே தெறிக்கவிட்டு விடுவார். நடிக்க சம்பளம் தடையல்ல, புது இயக்குனர் என்ற தடையெல்லாம் கிடையாது. கதை பிடித்துவிட்டால் போதும் எந்த கேரக்டராக இருந்தாலும் சரி, ஒரு கை பார்த்துவிடலாம் என கோதாவில் இறங்கிவிடுவார் பகத் பாசில்.

47

இப்படி ஒரு அசாத்திய கலைஞன் தமிழில் எண்ட்ரி கொடுத்தது சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் மூலம் தான். மோகன் ராஜா இயக்கிய அப்படத்தில் சைலண்ட் வில்லனாக நடித்து இருந்தார் பகத். அதற்கு முன்னர் வரை நஸ்ரியாவின் கணவர் என்கிற அடையாளத்தோடு இருந்த பகத் பாசிலுக்கு வேலைக்காரன் ஒரு அடையாளமாக மாறியது.

இதையும் படியுங்கள்... ஹீரோ டூ வில்லன்... அசுர வளர்ச்சி கண்ட நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

57

சின்ன ரோலாக இருந்தாலும் நல்ல ரோலாக இருக்க வேண்டும் என விரும்பும் பகத், அப்படி தேர்ந்தெடுத்து நடித்த மற்றொரு தமிழ் படம் தான் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் மனைவி தடம் மாறி சென்றதும், தன்னிடம் இல்லாதது எது அவனிடம் இருக்கிறது என உருகும் காட்சியில் ஒட்டுமொத்த நடிப்பையும் அப்பட்டமாக்கி இருப்பார் பகத்.

67

புஷ்பா படத்தில் இரண்டாம் பாதியில் வந்தாலும், மொட்டை பாஸாக மாஸ் காட்டி அப்ளாஸ் வாங்கி இருந்தார் பகத். புஷ்பாவின் இரண்டாம் பாதி என்றால், கமலின் விக்ரம் படத்தில் முதல் பாதி முழுவதும் பகத்தின் ராஜ்ஜியம் தான். அவரின் நடிப்பால் முதல் பாதி முழுக்க படத்தை தன் தோழில் சுமந்து சென்றிருக்கும் அவரது அமர் கேரக்டருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

77

இதையடுத்து மாமன்னன் படத்தில் வெறும் கண் பார்வையிலேயே வில்லத்தனத்தில் மிரள செய்து ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டது அவரது ரத்னவேலு கேரக்டர். ஒரு வில்லனை ஹீரோ ரேஞ்சுக்கு கொண்டாட முடியும் என உணர்த்தியது பகத் பாசில் தான். எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழியை கற்று நடித்து வரும் பகத் பாசில், தற்போது பான் இந்தியா நடிகராக வளர்ந்து வருகிறார். அவர் இந்த அளவுக்கு வெற்றி மேல் வெற்றியை குவித்து வருவதற்கு அவரது தோல்வி தன் உத்வேகம் என அவரே பலமுறை கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... தமன்னாவை பார்த்ததும் பாய்ந்து வந்த ரசிகர்... அலேக்காக தூக்கி எறிந்த பவுன்சர்கள் - வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved