தமன்னாவை பார்த்ததும் பாய்ந்து வந்த ரசிகர்... அலேக்காக தூக்கி எறிந்த பவுன்சர்கள் - வைரலாகும் வீடியோ

கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்த நடிகை தமன்னாவின் கையை ரசிகர் ஒருவர் பிடித்து இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Fan breaks security and grab Tamannaah hand at public in kerala viral video

நடிகை தமன்னா தற்போது தென்னிந்திய திரையுலகில் மீண்டும் பிசியாகி உள்ளார். அவர் நடிப்பில் தற்போது தமிழில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி உள்ளது. நெல்சன் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தமன்னா. அவர் ரஜினியுடன் நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். இப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதுதவிர தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக போலா ஷங்கர் என்கிற திரைப்படத்திலும் ஹீரோயினாக நடித்திருக்கிறார் தமன்னா. இது தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். இப்படமும் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஆகஸ்ட் 11-ந் தேதி போலா ஷங்கர் திரைப்படம் திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... அஜித்தின் மாமனாருக்கு இப்படி ஒரு திறமையா? டி எம் எஸ் குரலில் பாடி அசத்திய வீடியோ வைரல்!

இப்படி ஒரே நேரத்தில் தமிழ், மற்றும் தெலுங்கு சூப்பர்ஸ்டாரின் படங்களில் நடித்துள்ள தமன்னா, அப்படத்தின் புரமோஷன் பணிகளில் செம்ம பிசியாக உள்ளார். இதனிடையே அண்மையில் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் தமன்னா. அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் பாதுகாப்பாளர்களை மீறி தமன்னாவிடம் பாய்ந்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென பாய்ந்து வந்து தமன்னாவின் கையை பிடித்த அந்த ஆர்வக்கோளாறு ரசிகரை, பவுன்சர்கள் அலேக்காக தூக்கியதை பார்த்த தமன்னா, அந்த ரசிகரை மீண்டும் அழைத்து, அவரை ஆசுவாசப்படுத்தி, என்ன வேண்டும் என கேட்க, அவரோ ஒரு செல்பி எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். உடனே சிரித்த முகத்தோடு அந்த ரசிகரின் செல்பிக்கு போஸ் கொடுத்துள்ளார் தமன்னா. மில்க் பியூட்டியின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ஹீரோ டூ வில்லன்... அசுர வளர்ச்சி கண்ட நடிகர் பகத் பாசிலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios