தல அஜித்தின் மாமனாரும், ஷாலினியின் தந்தையுமான பாபு தற்போது யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி அதில் டி எம் எஸ் குரலில் பாடி அசத்திய பாடல்கள், சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கு நடிப்பை தாண்டி... பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உள்ளது அனைவரும் அறிந்தது தான். குறிப்பாக சமையலில் துவங்கி, போட்டோ கிராபி, ரிப்பில் ஷூட்டிங், ஏரோ மாடலிங், கார் ரேஸ், பைக் ரேஸ், போன்ற பல விஷயங்களில் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது பைக்கில் உலகை சுற்றும் பயணத்தை கையில் எடுத்துள்ளார். மேலும் பைக் வேர்ல்டு டூர் என்கிற நிறுவனத்தை துவங்கி அதன் மூலம் பலரை பைக் ரெய்டு அழைத்து செல்லவும் தயாராகியுள்ளார் அஜித்.

'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

இவர் பிரபல நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஷாலினி திருமணத்திற்கு பின்னர்... திரையுலகை விட்டு முழுமையாக விலகிய நிலையில், குழந்தைகளை கண்ணும் - கருத்துமாக வளர்த்து வருகிறார். நீண்ட நாட்களுக்கு பின்னர் சமீபத்தில் தான் இன்ஸ்டாராம் பக்கத்தில் கூட இணைந்தார். ஷாலினிக்கு பேட்மிண்டன் விளையாட்டு பிடிக்கும் என்பதால்... வீட்டிலேயே பேட்மிண்டன் கோர்ட் ஒன்றையும் அஜித் கட்டி கொடுத்துள்ளார்.

தற்போது அஜித்தின் மாமனார் பற்றி வெளியாகியுள்ள தகவல் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ஷாலினியின் தந்தை பாபுவுக்கு இசை மீது எப்போதுமே கொள்ளை ஆர்வம். 50, 60, 70களில் வெளிவந்த பாடல்கள் என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக இவர் டி.எம்.சௌந்தரராஜனின் தீவிர ரசிகராம். இவர் பொழுதுபோக்குக்காக நிறைய இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டிஎம்எஸ்ஸின் பாடல்கள் பாடி அசத்தி இருக்கிறாராம்.

Director Siddique: விஜய்யை வைத்து 'பிரெண்ட்ஸ்' படத்தை இயக்கிய இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்!

odum megangale | cover song by ASB | TMS

இவர் டிஎம்எஸ்ஸின் ரசிகர்கள் என்பதாலோ... என்னோவோ இவருடைய குரல் அப்படியே டி எம் எஸ் போலவே இருக்கிறது. தற்போது எ எஸ் பி என்ற யூடியூப் சேனல் ஒன்றை துவங்கியுள்ள இவர், அதில் தனக்கு பிடித்த பாடல்களை பாடி, வெளியிட்டுள்ளார். இந்த பாடல்கள் அதிகம் கேட்டு ரசிக்கப்பட்டு வருதோடு... ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களையும் ஷாலினியின் தந்தை பாபுவுக்கு தெரிவித்து வருகிறார்கள்.


Yaar antha nilavu | Cover Song By ASB | TMS Songs