- Home
- Cinema
- ஆக்ஷன் விருந்து படைக்க ரெடியாகும் மெய்யழகன் இயக்குனர்..! பிரேம்குமாரின் அடுத்த பட ஹீரோ இவரா?
ஆக்ஷன் விருந்து படைக்க ரெடியாகும் மெய்யழகன் இயக்குனர்..! பிரேம்குமாரின் அடுத்த பட ஹீரோ இவரா?
மெய்யழகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரேம்குமார் அடுத்ததாக இயக்க உள்ள படத்தின் ஹீரோ யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

Meyazhagan Director New Film
96, மெய்யழகன் போன்ற தரமான படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் சி. பிரேம்குமார். உணர்வுபூர்வமான படங்களை விரும்பும் ரசிகர்கள் பிரேம்குமாரின் முதல் இரண்டு படங்களையும் வரவேற்றனர். தற்போது தனது புதிய படம் குறித்துப் பேசியுள்ளார் பிரேம்குமார். ஃபஹத் ஃபாசில் தனது புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்று பிரேம்குமார் தெரிவித்துள்ளார். இதுவரை உணர்வுபூர்வமான படங்களை இயக்கி வந்த பிரேம்குமார், தற்போது பகத் பாசில் படத்தை ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்க திட்டமிட்டு உள்ளாராம்.
ஃபஹத் ஃபாசில் உடன் கூட்டணி அமைக்கும் பிரேம்குமார்
சமீபத்திய பேட்டியில் பிரேம்குமார் இதனைத் தெரிவித்தார். ஃபஹத்துடன் நாற்பத்தைந்து நிமிடங்கள் படத்தின் கதை குறித்து விவாதித்ததாகவும், ஃபஹத்துக்குக் கதை பிடித்திருப்பதாகவும், தமிழிலேயே படம் தயாராகும் என்றும் பிரேம்குமார் தெரிவித்தார். மெய்யழகன் படத்திற்கு பின்னர் பிரேம்குமார் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் என்றும், விக்ரம் உடன் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு தற்போது ஃபஹத் ஃபாசில் படத்தின் பக்கம் சென்றிருக்கிறார் பிரேம் குமார். இந்த கூட்டணி ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மெய்யழகன் இயக்குனர்
பிரேம்குமார் கடைசியாக இயக்கிய படம் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த் சாமி நடித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஃபஹத் ஃபாசில் நடிப்பில் தமிழில் வெளியான கடைசிப் படம் மாரிசன். மாமன்னன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஃபஹத் ஃபாசில் - வடிவேலு கூட்டணியில் வெளியான மாரிசன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் திரையரங்குகளில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. சுதீஷ் சங்கர் இயக்கிய இப்படம், சாலைப் பயணப் படமாக வெளியானது.
ஃபஹத் ஃபாசிலின் கடைசி படம்
ஃபஹத் மற்றும் வடிவேலுவின் நடிப்பு படத்திற்குப் பலமாக இருந்தது. உணர்வுபூர்வமான காட்சிகளுடன், த்ரில்லர் அம்சங்களும் கொண்ட படத்திற்குக் கதை, திரைக்கதை எழுதியவர் வி. கிருஷ்ணமூர்த்தி. கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்ரா, பி.எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இ ஃபோர் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்த இப்படத்திற்கு ஒளிப்பதிவு கலைச்செல்வன் சிவாஜி, இசை யுவன் சங்கர் ராஜா, படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் மேற்கொண்டு இருந்தார்.