கல்யாணமே வேண்டாம்; கடைசி வரை முரட்டு சிங்கிள் தான்! எதிர்நீச்சல் சீரியல் நாயகி அறிவிப்பு
எதிர்நீச்சல் 2 சீரியல் நாயகி ஒருவர் தான் திருமணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழ விரும்புவதாக கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சன் குடும்பம் விருதுகள் 2025 விழாவில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நாயகி பார்வதி வெங்கடரமனன், தான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என கூறி இருப்பது ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
Ethirneechal 2 Serial
சன் டிவியில் சக்கைபோடு போடும் சீரியல்களில் எதிர்நீச்சல் 2வும் ஒன்று. இந்த சீரியலின் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. எதிர்நீச்சல் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2024-ம் ஆண்டு வரை நடைபெற்றது. முதல் பாகம் முடிந்த கையோடு, புது கதைகளத்துடன் அந்த சீரியலின் 2வது பாகத்தை தொடங்கினர். முதல் சீசனில் நாயகியாக நடித்த மதுமிதா விலகியதால், அவருக்கு பதில் பார்வதி வெங்கடரமனன் நடித்து வருகிறார். மற்றபடி இதர நடிகர்கள் எல்லாம் இந்த தொடரிலும் உள்ளனர்.
Ethirneechal 2 Serial Heroines
எதிர்நீச்சல் 2 தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற சன் குடும்பம் விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எதிர்நீச்சல் 2 நாயகி பார்வதியிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன, அப்போது அவர் அளித்த பதில்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம். முதலாவதாக சாக்லேட் பிடிக்குமா அல்லது ஐஸ்கிரீம் பிரிக்குமா என கேட்டதற்கு தனக்கு சாக்லேட் தான் பிடிக்கும் என பதிலளித்தார் பார்வதி.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் சீரியல் நாயகிகள் 3 பேரை கொத்தாக தூக்கிய விஜய் டிவி!
Parvathy Venkitaramanan
அடுத்ததாக நாய் பிடிக்குமா அல்லது பூனை பிடிக்குமா என கேட்டதற்கு நாய் தான் பிடிக்கும் என பார்வதி கூறினார். மேக்கப் போடுவது பிடிக்குமா அல்லது மேக்கப் இல்லாமல் இருப்பது பிடிக்குமா என்கிற கேள்விக்கு நோ மேக்கப் என பதிலளித்தார். 90ஸ் காலகட்டம் பிடிக்குமா 2கே காலகட்டம் பிடிக்குமா என கேட்டதற்கு தனக்கு 90ஸ் தான் பிடிக்கும் என பார்வதி தெரிவித்தார். மெசேஜ் பண்ணுவது பிடிக்குமா அல்லது போன் பேசுவது பிடிக்குமா என்கிற கேள்விக்கு மெசேஜ் செய்வது தான் பிடிக்கும் என கூறினார் பார்வதி.
Ethirneechal 2 Heroine Parvathy
அதேபோல் பகல் நேர ஷூட்டிங் பிடிக்குமா அல்லது இரவு நேர ஷூட்டிங் பிடிக்குமா என்கிற கேள்விக்கு பகலில் ஷூட்டிங் செல்வது தான் பிடிக்கும் என கூறிய பார்வதியிடம் அடுத்ததாக சிங்கிளா... கமிட்டடா என கேட்டதற்கு சட்டென சிங்கிள் என பதிலளித்தார். பின்னர் எதிர்காலத்தில் காதல் திருமணம் செய்யப்போகிறீர்களா அல்லது பெற்றோர் பார்க்கும் பையனை கரம்பிடிக்க போகிறீர்களா என்கிற கேள்விக்கு யாரும் எதிர்பாராத விதமாக நான் தான் திருமணமே செய்யப்போவதில்லையே என கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் பார்வதி.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் 2-வில் பட்டாசாய் எண்ட்ரி ஆன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!