எதிர்நீச்சல் சீரியல் நாயகிகள் 3 பேரை கொத்தாக தூக்கிய விஜய் டிவி!
சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமான 5 நடிகர், நடிகைகள் தற்போது விஜய் டிவி சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளனர்.

எதிர்நீச்சல் சீரியல்
சன் டிவியில் சக்கைப்போடு போட்ட சீரியல்களில் எதிர்நீச்சல் சீரியலும் ஒன்று. அந்த சீரியலின் முதல் பாகம் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஒளிபரப்பானது. அந்த சீரியலின் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். தற்போது எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நாயகியாக நடித்த மதுமிதா விலகியதால் தற்போது பார்வதி ஜனனியாக நடித்து வருகிறார்.
அய்யனார் துணை மதுமிதா
முதல் பாகத்தை இயக்கிய திருச்செல்வம் தான் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். ஆனால் இந்த சீரியல் டிஆர்பி-யில் பெரியளவில் சோபிக்கவில்லை. மறுபுறம் எதிர்நீச்சல் சீரியல் நட்சத்திரங்களை வரிசையாக தங்கள் வசம் இழுத்து வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... மௌனம் பேசியதே; சீரியலை விட்டு விலக இது தான் காரணம் - லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா!
தனம் சீரியல் நாயகி சத்யா தேவராஜன்
அதேபோல் எதிர்நீச்சல் சீரியலின் மற்றொரு நாயகியான சத்யா தேவராஜனும் தற்போது விஜய் டிவிக்கு தாவி இருக்கிறார். இவர் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள தனம் சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகி உள்ளார் சத்யா தேவராஜன். விஜய் டிவி சீரியலில் நடிக்க கமிட்டானாலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
சிந்து பைரவி சீரியல் நடிகை காயத்ரி
இதுதவிர விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மற்றொரு சீரியலான சிந்து பைரவி தொடரிலும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை நடித்து வருகிறார். அதன்படி எதிர்நீச்சல் சீரியலில் ஜான்சி ராணியாக நடித்த காயத்ரி, சிந்து பைரவி தொடரில் சிவாவின் அம்மாவாக நடித்து வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் மூன்று எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் விஜய் டிவிக்கு தாவி இருப்பதால் சன் டிவிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இது டிஆர்பி ரேஸில் எந்த அளவுக்கு பிரதிபலிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சல் 2-வில் பட்டாசாய் எண்ட்ரி ஆன பாக்கியலட்சுமி சீரியல் நடிகை!