கேம் சேஞ்சரில் ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம்; பிரபலம் ஓபன் டாக்
கேம் சேஞ்சர் படத்தில் இயக்குனர் ஷங்கருடன் பணிபுரிந்தது மோசமான அனுபவம் என்று பிரபல படத்தொகுப்பாளர் ஷமீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.

Shameer Muhammed Shocking Comments About Director Shankar
மலையாளத்தின் முன்னணி திரைப்பட எடிட்டர்களில் ஒருவரான ஷமீர் முஹம்மது, இந்த ஆண்டு ரேகா, நரிவேட்டை போன்ற வெற்றிப் படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டு டர்போ, ஆபிரகாம் ஓஸ்லர், ஏஆர்எம், மார்கோ போன்ற படங்களையும் எடிட் செய்துள்ளார். இந்த ஆண்டின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றான கேம் சேஞ்சர் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஷங்கர் இயக்கிய இப்படத்தில் பணிபுரிந்தது சுகமான அனுபவம் அல்ல என்று ஷமீர் முஹம்மது தெரிவித்துள்ளார்.
கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஆதங்கம்
ஒரு வருடத்தில் முடிய வேண்டிய படம் மூன்று ஆண்டுகள் நீண்டதாகவும், மலையாளத்தில் படங்கள் எடிட் செய்ய வேண்டியிருந்ததால் அப்படத்தை விட்டு விலகியதாகவும் ஷமீர் கூறி உள்ளார். அப்படத்தின் மொத்த ஃபுட்டேஜ் ஏழரை மணி நேரம் இருந்ததாகவும், அதை மூன்றரை மணி நேரமாகக் குறைத்ததாகவும், பின்னர் வந்த எடிட்டர் அதை இரண்டே முக்கால் மணி நேரமாகக் குறைத்ததாகவும் தெரிவித்தார். ஆறு மாதங்கள் கூடுதலாக வேண்டும் என்று கூறியதால் அப்படத்தில் இருந்து தான் விலகியதாக ஷமீர் தெரிவித்துள்ளார்.
ஷங்கருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம் இல்லை
மேலும் மலையாளத்தில் மார்கோ, ஏஆர்எம் போன்ற படங்களில் பணிபுரிய வேண்டியிருந்ததால் கேம் சேஞ்சரை விட்டு விலகியதாக ஷமீர் கூறினார். கேம் சேஞ்சருக்காக மார்கோ, ரேகா, ஏஆர்எம் படங்களை விட்டிருந்தால் அது முட்டாள்தனமாக இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஷங்கருடன் பணிபுரிந்தது நல்ல அனுபவம் அல்ல என்றும் ஷமீர் கூறி உள்ளார். எடிட்டிங்கிற்கு ஒரு நாள் வேண்டும் என்று கூறினால், சரியான தேதியைக் கூற மாட்டார் என்றும் ஷமீர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.
மிகப்பெரிய தோல்வியை சந்தித்த கேம் சேஞ்சர்
கேம் சேஞ்சர் படத்துக்காக 300 நாட்கள் வரை சென்னைக்கு சென்றிருக்கிறேன் என்றும், ஷங்கருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் ஷமீர் கூறி உள்ளார். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இப்படத்தை தில் ராஜு தயாரித்திருந்தார். இப்படம் சுமார் 200 கோடி நஷ்டத்தை சந்தித்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

