கேம் சேஞ்சர் பிளாப் ஆனது ஏன்? உண்மையை போட்டுடைத்த கார்த்திக் சுப்பராஜ்
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் படுதோல்வி அடைந்த நிலையில், அதற்கான காரணத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறி உள்ளார்.

Karthik Subbaraj Says About Game Changer Failure : ராம் சரண், கியாரா அத்வானி நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் கேம் சேஞ்சர். தில் ராஜு தயாரித்திருந்த இப்படத்தின் மூலக்கதை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுடையது. கேம் சேஞ்சர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்தில் கலட்டா பிளஸுக்கு அளித்த பேட்டியில், இயக்குநர் ஷங்கருக்கு அளித்த கதையில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக கூறி உள்ளார்.
Game changer
கேம் சேஞ்சர் கதை மாறியது
கேம் சேஞ்சர் பற்றி கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது: "கதையின் ஒன்லைன் தான் நான் கொடுத்தேன். உறுதியான கொள்கைகளைக் கொண்ட ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி அரசியல்வாதியாக மாறுவது பற்றியது அது. ஷங்கர் சாருக்குக் கதையைக் கொடுத்தபோது, அவர் அதை எப்படி விரிவுபடுத்துவார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன். நான் அவருக்கு சொன்னது அதுதான். ஆனால், இறுதியில் அது முற்றிலும் மாறுபட்ட கதையாக மாறியது." என கார்த்திக் சுப்பராஜ் கூறினார்.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்சர் தோல்வி எதிரொலி; இன்ஸ்டாவில் தமனை அன்பாலோ செய்தாரா ராம் சரண்?
Shankar
கேம் சேஞ்சர் தோல்வி குறித்து கார்த்திக் சுப்பராஜ்
கதையில் மாற்றம் செய்யப்படுவது குறித்து கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், "பல எழுத்தாளர்கள் அந்தப் படத்தில் பணியாற்றி இருந்தனர். திரைக்கதையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கதையிலும் மாற்றம் ஏற்பட்டது. ஆனால், சினிமாவுக்காகச் செய்யப்படும் மாற்றங்களை மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இந்தப் படம் ஏன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறவில்லை என்று யாராலும் சொல்ல முடியாது" என்றார்.
கேம் சேஞ்சர் தோல்வி குறித்த கேள்விக்கு தான் கார்த்திக் சுப்பராஜ் இப்படி ஒரு பதிலை அளித்தார். அதேசமயம், படம் வெளியான சமயத்தில், படத்தில் ஒரு அங்கமாக இருக்க வாய்ப்பளித்த ஷங்கருக்கு நன்றி தெரிவித்து கார்த்திக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
Game Changer Movie Ramcharan
மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்த கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கிய ஆக்ஷன் திரைப்படமான கேம் சேஞ்சரில் ராம் சரண், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், ஜெயராம், சமுத்திரக்கனி ஆகியோரும் நடித்திருந்தனர். வெளியானபோது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து மிக மோசமான விமர்சனங்களைப் பெற்றது. இந்தியன் 2 படத்திற்குப் பிறகு ஷங்கர் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாக்ஸ் ஆபிஸ் தோல்வியாக இது மாறியது. ரூ.186.28 கோடி வசூல் செய்த படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.400 கோடியாகும்.
இதையும் படியுங்கள்... கேம் சேஞ்ஜர் பிளாப் ஆனதுக்கு இதுதான் காரணம்; புது குண்டை தூக்கிப்போட்ட தமன்!