- Home
- Cinema
- ரிலீசாகி 25 நாளாகியும் குறையாத கூட்டம்; பாக்ஸ் ஆபிஸில் அடுத்த மைல்கல்லை நெருங்கும் டிராகன்!
ரிலீசாகி 25 நாளாகியும் குறையாத கூட்டம்; பாக்ஸ் ஆபிஸில் அடுத்த மைல்கல்லை நெருங்கும் டிராகன்!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடிப்பில் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் டிராகன் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Dragon 25 days box office collection : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் டிராகன். அவரின் முதல் படமான லவ் டுடே மாபெரும் வெற்றியை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூலித்திருந்தது. அப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் டிராகன் படத்தையும் தயாரித்து இருந்தது. டிராகன் படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தனர்.
Dragon
டிராகன் திரைப்படம் இளசுகளை கவரும் வகையில் காதல், காமெடி, ரொமான்ஸ் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டு இருந்தது. டிராகன் படத்தில் கெளதம் மேனன், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், ஹர்ஷத் கான், விஜே சித்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இதற்கு போட்டியாக தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூல் சாதனையை 20 நாளில் சல்லி சல்லியாய் நொறுக்கிய டிராகன்!
Dragon Movie Collection
தனுஷ் இயக்கிய நீக் திரைப்படத்தை பாக்ஸ் ஆபிஸில் பந்தாடிய டிராகன் திரைப்படம், அடுத்தடுத்த வாரங்களில் வெளிவந்த ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் மற்றும் ரியோவின் ஸ்வீட் ஹார்ட் ஆகிய படங்களையும் பாக்ஸ் ஆபிஸில் பதம் பார்த்துள்ளதோடு தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 25 நாட்கள் ஆகியும் இன்னும் தியேட்டர்களில் ஹவுஸ் புல் காட்சிகளாக டிராகன் ஓடி வருகிறது. இதனால் படக்குழு செம ஹாப்பியாக உள்ளதாம்.
Dragon Movie Box Office
வெறும் 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 25 நாட்களைக் கடந்தும் வசூல் வேட்டை ஆடி வருகிறது. இப்படம் தற்போது வரை உலகளவில் ரூ.145 கோடி வசூலித்து உள்ளது. இனி அடுத்த 10 நாட்களுக்கு டிராகன் படத்திற்கு எந்தவித போட்டியும் இல்லாததால் இப்படம் ரூ.150 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் இந்த ஆண்டின் முதல் 150 கோடி வசூல் படமாக டிராகன் மாறும்.
இதையும் படியுங்கள்... 2025-ல் வெளியான 45 படங்களில் வெறும் 4 தமிழ் படங்கள் தான் ஹிட்! லிஸ்ட்ல விடாமுயற்சி இருக்கா?