- Home
- Cinema
- 2025-ல் வெளியான 45 படங்களில் வெறும் 4 தமிழ் படங்கள் தான் ஹிட்! லிஸ்ட்ல விடாமுயற்சி இருக்கா?
2025-ல் வெளியான 45 படங்களில் வெறும் 4 தமிழ் படங்கள் தான் ஹிட்! லிஸ்ட்ல விடாமுயற்சி இருக்கா?
2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை 45 படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன, அதில் வெறும் நான்கே படங்கள் தான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.

4 hits out of 45 films: What is the state of Tamil cinema in 2025 : 2025-ம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையில், தமிழ் திரையுலகில் இதுவரை 45 படங்கள் வெளியானதாகவும் அதில் வெறும் 4 படங்கள் மட்டுமே வெற்றியடைந்திருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறி இருக்கின்றார்.
2025-ம் ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர், பாலா - அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான், ரவி மோகனின் காதலிக்க நேரமில்லை, விஷ்ணுவர்தன் இயக்கிய நேசிப்பாயா போன்ற முன்னணி பிரபலங்களில் படங்கள் ரிலீஸ் ஆனாலும் அவை அனைத்துமே தோல்வி அடைந்தன. ஆனால் இந்த படங்களுக்கெல்லாம் போட்டியாக சுந்தர் சி-யில் 13 வருட பழைய படமான மத கஜ ராஜா ரிலீஸ் ஆகி பொங்கல் வின்னராக வெற்றிவாகை சூடியது.
Pongal Release Movies
மதகஜராஜா வெற்றிக்கு பின்னர் ஜனவரி 26-ந் தேதி ரிலீஸ் ஆன குடும்பஸ்தன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு 2வது வெற்றி கிட்டியது. இப்படத்தில் மணிகண்டன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் பிப்ரவரி மாதம் ஆரம்பமே அஜித்தின் விடாமுயற்சி படத்துடன் பிரம்மாண்டமாக தொடங்கியது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் முதன்முறையாக நடித்த படம் இது என்பதால் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.137 கோடி வசூலித்தது. இப்படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படம் என தனஞ்சயன் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... கிங்ஸ்டன் vs டிராகன்; பாக்ஸ் ஆபிஸில் பிரதீப்பை பந்தாடினாரா ஜிவி; வசூலில் யார் டாப்பு?
Vidaamuyarchi, Dragon
பின்னர் பிப்ரவரி 21ந் தேதி தனுஷின் நீக் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் நீக் படம் தோல்வியை தழுவினாலும் டிராகன் படம் அதிரிபுதிரியான வெற்றியை ருசித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படி இந்த இரண்டு மாதங்களில் டிராகன், மதகஜராஜா, குடும்பஸ்தன், விடாமுயற்சி ஆகிய நான்கு படங்கள் மட்டுமே வெற்றிப்படங்களாக அமைந்துள்ளதாக தனஞ்சயன் கூறி இருக்கிறார். இந்த 45 படங்களில் 10 படங்களாவது வெற்றிபெற்றிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
Tamil Cinema Hit Movies 2025
இருப்பினும் கடந்த 2024-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2025-ம் ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. 2024-ம் ஆண்டு முதல் 2 மாதங்களில் ஒரு ஹிட் படத்தை கூட தமிழ் சினிமா கொடுக்கவில்லை. ஆனால் தற்போது வரிசையாக 4 படங்கள் வெற்றிவாகை சூடி இருக்கின்றன. இம்மாதமும் விக்ரமின் வீர தீர சூரன் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் லைன் அப்பில் உள்ளதால் தமிழ் சினிமாவின் வெற்றி வேட்டை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 2025-ல் மாஸ் ஹிட் அடித்த டாப் 3 தமிழ் படங்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா?