சிம்பு படத்தோடு மோதியதால் நொந்து போன இயக்குனர்...புக் மை ஷோவால் கண்ணீர் விட்டு பேட்டி
சிறிய பட்ஜெட் இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வாழ விடுங்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
doodi
சிம்பு நடிப்பில் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து இருந்த வெந்து தணிந்தது காடு படம் கடந்த 15ஆம் தேதி தான் வெளியானது. அதைத்தொடர்ந்து அருண் விஜய் நடித்த சினம் படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான பெற்றதோடு திரையரங்குகள் பலவற்றையும் ஆக்கிரமித்து இருந்தது இந்த படங்கள். இந்நிலையில் அதே நாளில் வெளியான டூடி படத்தின் இயக்குனர் தற்போது கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
doodi
கனெக்டிங் டாட் நிறுவனத்தின் சார்பில் படத்தை தயாரித்து கதை வசனம் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார் கார்த்திக் மதுசூதனன். இந்த படத்திற்கு நிஹாரிக்கா சதீஷ், ரத்தன் கங்காதர் என இருவர் கலை இயக்கம் செய்துள்ளனர். ஸ்ரீதா சிவதாஸ், ஜீவரவி, அர்ஜுன் மணிகண்டன் அக்ஷதா, எட்வின் ராஜ் மற்றும் பலர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷுக்கு ஜோடியாகும் டான் பட நாயகி...படக்குழு சொன்ன நியூ அப்டேட்..
doodi
முதலில் நாயகனை வெறுக்கும் நாயகி ஒரே வாரத்தில் காதலில் விழுகிறாராம். பின்னர் தனது காதலை வேண்டாம் என்று சொல்லும் நாயகமும் காதலை பக்கம் திரும்புகிறார். ஆனால் நாயகியோ நான் ஏற்கனவே ஐந்து வருடமாக ஒருவரை காதலிக்கிறேன் என புதிய டிவிஸ்ட் வைக்கிறார். இதனால் நாயகி விட்டு விலகுகிறார் நாயகன். அதன்பிறகு நடக்கப்போவது தான் படத்தின் மொத்த கதையுமாம்.. இதில் நாயகன் கார்த்திக் மதுசூதனன், நாயகி ஸ்ரீதா சிவதாஸின் நடிப்பும் பாராட்டு பெற்றிருந்தது. மேலும் படம் முழுக்க குடும்பப் பாங்கில் வரும் நாயகி கவர்ச்சி கட்டாமல் இருந்தது குறித்தும் நல்ல விமர்சனங்களே இருந்தது.
மேலும் செய்திகளுக்கு...மாஸாக ரீ என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்...கையில் துப்பாக்கியுடன் சாமானியன்
doodi
இந்நிலையில் இயக்குனரை கார்த்திக் மதுசூதனனின் பேட்டி வைரலாகி வருகிறது. அதில் , தமிழகத்தில் இவருக்கு திரையரங்குகளே ஒதுக்கப்படவில்லை. இறுதியாக 47 திரையரங்குகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திரையரங்குகளில் டூடிபடத்தை வெளியிட பிரபல நிறுவனம் ஒன்றும் முன் வந்துள்ளது. எல்லாம் சுமூகமாக சென்று கொண்டிருந்த வேலையில் திடீரென ஆன்லைன் புக்கிங் குறித்து இவருக்கு பல இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது பிரபல புக் மை ஷோ ஆன்லைன் டிக்கெட் புக்கிங்கில் இவரது படத்திற்கு ஆன பேனர் கூட இடம் பெறவில்லை. இயக்குனர் இடத்தில் செம்பருத்தி நாயகன் கார்த்திக் ராஜாவின் படம் வைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளார் இயக்குனர் கார்த்திக் மதுசூதனன்.
மேலும் செய்திகளுக்கு...நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய்க்கு முன் மணிரத்னம்முடிவு செய்த நடிகை யார் தெரியுமா?
doodi
இது குறித்த சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இவர் புக் மை ஷோ போன்ற பிரபல நிறுவனங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் தன்னுடைய படத்திற்கு எவ்வளவு பின்னடைவு ஏற்படும் என்பது குறித்து கண்ணீர் பேட்டி அளித்திருந்தார். அதேபோல முன் பதிவு டிக்கெட்களுக்கு உதவும் மற்ற ஆன்லைன் நிறுவனங்களும் இதே போன்ற குளறுபடியில் தான் ஈடுபட்டுள்ளனர். அதோடு பிரபல திரையரங்கு ஒன்றில் இவரது படத்திற்கான ஈவினிங் ஷோவையும் ரத்து செய்துள்ளனர். இதனால் மிகுந்த மனம் வருத்தம் அடைந்துள்ள படக்குழு தங்களது முதல் படத்தை இவ்வாறு செய்துவிட்டனர் என கலங்கி அளித்துள்ள பேட்டி தான் தற்போது வைரல் ஆகி வருகிறது. திரையரங்குகளில் படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளி வராததும் ஆன்லைன் கூட இந்த படத்திற்கான எந்த சூவடும் இல்லாததும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சிறிய பட்ஜெட் இயக்குனர்கள் மற்றும் அறிமுக நடிகர்களை வாழ விடுங்கள் என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.